பொது செய்தி

இந்தியா

ஹிந்து - முஸ்லிம் ஜோடி ஓட்டலில் தங்க அனுமதி மறுப்பு

Updated : அக் 08, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (53)
Share
Advertisement

புதுடில்லி: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், ஓட்டல் அறையில் தங்க வந்த ஹிந்து - முஸ்லிம் ஜோடியினருக்கு, மதத்தை காரணம் காட்டி, ஓட்டல் நிர்வாகம் அறை தர மறுத்தது சர்சையை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news



ராஜஸ்தானில், உள்ள உதய்ப்பூரை சேர்ந்த, 31 வயதான உதவி பேராசிரியர், தன் தோழியுடன் ஜெய்ப்பூர் வந்தார். அங்கு, ஓட்டல் முன்பதிவுகளை நிர்வகிக்கும் நிறுவனமான, 'ஒயோ' கட்டுப்பாட்டில் செயல்படும், 'சில்வர் கீ' எனும் ஓட்டலில், அறை முன் பதிவு செய்திருந்தார். அறையில் தங்குவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது, அவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்றும், தனது தோழி, ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, அவர்களுக்கு அறை தர, ஓட்டல் நிர்வாகம் மறுத்தது. காரணம் கேட்டபோது, 'வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாக அறையில் தங்க, அனுமதிக்க கூடாது' என, உள்ளூர் போலீசார் உத்தரவிட்டுள்ளதாக, ஓட்டல் மேலாளர் தெரிவித்தார். இதை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு, அந்த ஜோடியினர் வலியுறுத்தினர். ஆனால், ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது.


latest tamil news



இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என, ஒயோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஓட்டலில் தங்க வந்த விருந்தினர்களிடம், மன்னிப்பும் கோரி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
09-அக்-201920:39:01 IST Report Abuse
Ray தஞ்சையில் காலை நேரத்தில் வந்த மணமான தம்பதியினரையே சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதி மறுத்தார்கள் திருமண ஆதாரம் கேட்டார்கள்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-அக்-201919:06:19 IST Report Abuse
Sampath Kumar இது என்னமோ இண்னைக்கு தான் நடக்குதுனு அவன் அவன் கருத்து சொல்லுறன் முபையில் இது சர்வ சாதாரணம் அங்க ஹோட்டல் காரன் ஏல்லாம் இளிச்ச வயணுக்களா?? நிலைமை தெரியாமல் கருத்து சொல்லாதீர்கள்
Rate this:
Cancel
Parthi JI - Vellore,இந்தியா
09-அக்-201917:36:06 IST Report Abuse
Parthi JI அட யாரு பொறுப்பு யாரு பொறுப்புண எதுனாலும் அவங்க தான் பொறுப்பு . அவர்களுக்கு உரிய ஆவணங்களை வாங்கி அறை கொடுத்து இருக்க வேண்டும் ... இதில் என்ன தவறு உள்ளது என்று தெரியவில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X