வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார் எண் சட்ட திருத்தம் கொண்டு வர முடிவு

Added : அக் 08, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : 'வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக, அவற்றோடு ஆதார் எண்ணை இணைக்கும் அதிகாரம் வேண்டும்' என்ற, தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, சட்ட திருத்தம் கொண்டு வர, சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் ஆணையம், சமீபத்தில் எழுதியிருந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது: வாக்காளர் பட்டியலில் சேர, புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களின் விபரங்களை சரி பார்க்கவும், வாக்காளர் பட்டியலில் இருந்து, போலி வாக்காளர்களை நீக்கவும், ஆதார் எண் விபரங்கள் தேவைப்படுகின்றன. உச்ச நீதிமன்றம், 2015 ல் பிறப்பித்த உத்தரவு, அதற்கு தடையாக இருக்கிறது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு, தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், திருத்தம் கொண்டு வர சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
10-அக்-201901:48:23 IST Report Abuse
spr "வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக, அவற்றோடு ஆதார் எண்ணை இணைக்கும் அதிகாரம் வேண்டும்' என்ற, தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, சட்ட திருத்தம் கொண்டு வர, சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது." இத்தனை செய்தும், ஆதார் அடையாள அட்டையை வாக்களிக்கும் பொழுது காட்ட வேண்டுமென்பதுவும், அதனைச் சரிபார்க்க என்ன முறை கையாளப்படப் போகிறது என்பதுவும் தெளிவாகச் சொல்லப்படாத வகையில் அனைத்து முயற்சிகளும் வீணே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X