சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்டி யானையை காட்டுக்குள் விட எதிர்ப்பு

Added : அக் 08, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை : தாயை இழந்த, மூன்று மாத பெண் குட்டி யானையை, மீண்டும் காட்டுக்குள் விட, வன உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் அருகே, தாயை இழந்து, காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த, மூன்று மாத பெண் யானையை, 2ம் தேதி, வனத் துறையினர் மீட்டனர்.காராச்சிக்கொரை வன கால்நடை மருத்துவமனையில், குட்டி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு, 'அம்மு குட்டி' என்று பெயர் வைத்துள்ளனர். குட்டி யானை செய்யும் குறும்புத் தனத்தை, அப்பகுதி மக்கள் ரசித்து வருகின்றனர். இச்சூழலில், அந்த குட்டி யானையை, காட்டுக்குள் விட, வனத்துறை திட்டமிட்டுள்ளது.

வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: குட்டி யானையை, காட்டுக்குள் விட்டால், மற்ற யானைகள் கூட்டம், அதை ஏற்று கொள்ளாது. எந்த யானையும், அதற்கு பால் கொடுக்க முன்வராது. இந்த குட்டியை ஒதுக்கியே வைக்கக்கூடும். மேலும் புலி, சிறுத்தைகளால், அதன் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். எனவே வண்டலுார், டாப்சிலிப் அல்லது முதுமலையில், குட்டி யானையை பராமரிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

குட்டி யானையை பாதுகாக்கக் கோரி, சமூக வலைதளங்களிலும், வன உயிரின ஆர்வலர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
09-அக்-201912:20:27 IST Report Abuse
Girija திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோவிலுக்கு யானை வாங்கும் முயற்சிகளில் உள்ளனர். இந்த குட்டி யானையை அவர்கள் பராமரிப்பில் விடலாமே? அல்லது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கும் தரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X