ராகுலுக்கு சிறப்பு பாதுகாப்பு படை; வாபஸ் பெறுகிறது மத்திய அரசு?

Updated : அக் 09, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (31)
Advertisement
rahul,ராகுல், சிறப்பு பாதுகாப்பு படை,வாபஸ், மத்திய அரசு?

புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படையை மத்திய அரசு, 'வாபஸ்' பெற முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படை மூலம், மத்திய அரசு, பாதுகாப்பு அளித்து வருகிறது.


வெளிநாடு பயணம்:

முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலைக்கு பின், இந்த சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. தற்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு, சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இதே பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இது 'வாபஸ்' பெறப்பட்டது.

தற்போது, ராகுலுக்கு வழங்கப்பட்டு வந்த, சிறப்பு பாதுகாப்பு படையை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ராகுல், அடிக்கடி வெளிநாடுகளுக்கு ரகசியமாக சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்போதும், ஆசிய நாடான, கம்போடியாவுக்கு, அவர் ரகசிய பயணம் சென்றுள்ளார். இது தொடர்பாக, மத்திய அரசு, ராகுலுக்கு சில தகவல்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. 'சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாபு வளையத்திற்குள் நீங்கள் இருப்பதால், உங்கள் வெளிநாட்டு பயணத்தின் போது, சிறப்பு படையினரும் உங்களுடன் இருக்க வேண்டும்.


அறிவிப்பு:

ஒருவேளை, சிறப்பு படை தேவை இல்லை என்று நீங்கள் கருதினால், இந்தியாவில் உங்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு படை பாதுகாப்பு, வாபஸ் பெறப்படும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக, மத்திய அரசு தரப்பில் இருந்து, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ராகுல் தரப்பிலும், பதில் அளிக்கப்படவில்லை. ஆனால், இது தொடர்பாக, ராகுலுக்கு தகவல் அனுப்பப்பட்டு இருப்பதாக, அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் மஜீத் மேமன் கூறியதாவது: ராகுலின் வெளிநாட்டு பயணத்தின் போது, சிறப்பு பாதுகாப்பு படையினர் உடன் செல்ல வேண்டும் என கூறுவது, அவருடைய தனிப்பட்ட அடிப்படை உரிமையையும், சுதந்திரத்தையும் பாதிக்கும் செயல். மேலும், மத்திய அரசின் செயல், ராகுலின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் விதமாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Sekar - mumbai ,இந்தியா
10-அக்-201900:58:59 IST Report Abuse
Ram Sekar மஜீத் மேமன் - உனக்கெல்லாம் ஏதாச்சும் இருக்கா?? சொல்லாம கொள்ளாமல் சொந்த காரணங்களுக்கு, ஊர் சுத்த போற ஆளுக்கு, இல்லை இல்லை பப்பு தம்பிக்கு என்னாத்துக்கு பாதுகாப்பு?? பாதுகாப்பு வீரர்கள் கூட செல்லவேண்டும் என்பதுதான் விதி. ஒருவேளை எங்கயாச்சும் ஏதாச்சும் நடந்துச்சுன்னா, மோடி அரசு மேல குத்தம் சொல்லுவீங்க.
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
09-அக்-201919:35:15 IST Report Abuse
Sanjay பச்சையப்பா, சின்ஸானுக்கு எதுக்கு பாதுகாப்பு
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-அக்-201919:17:29 IST Report Abuse
Sampath Kumar அடுத்த ராஜிவு காந்தி ரெடியா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X