பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவ... திட்டம்! எல்லையில் 20 முகாம்களை நடத்துகிறது பாக்.,

Updated : அக் 09, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
Kashmir,Pakistan,காஷ்மீர்,பாகிஸ்தான்,பயங்கரவாதிகள், ஊடுருவ,திட்டம், எல்லை,முகாம்,பாக்.,

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், குளிர்காலம் துவங்குவதற்கு முன், பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க, பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இதற்காக. எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், 20 பயங்கரவாத முகாம்களை நடத்தி வருகிறது. அதில் பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் மூலம், இந்தியாவில் தாக்குதல் நடத்தவும், திட்டமிட்டுள்ளது என, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது, பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், 40 வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை, பாக்., எல்லையிலிருக்கும் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில், 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


வரவேற்பு:

இதையடுத்து, எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை, பாகிஸ்தான் மூடியது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு, கடந்த ஆக., 5ல் ரத்து செய்தது. இதற்கு, இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இதற்கு, பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உட்பட உலக நாடுகள் பலவும், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது, பாகிஸ்தானின் கோபத்தை அதிகப்படுத்தியது.

கடந்த மாதம் இறுதியில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த, ஐ..நா.,வின், 74ம் ஆண்டு பொது சபை கூட்டத்தில் பங்கேற்ற, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரம் பற்றி பேசினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல நாடுகளின் தலைவர்களை சந்தித்து, காஷ்மீர் பிரச்னை பற்றி புலம்பினார். ஆனால், எந்த நாடுகளின் தலைவர்களும், காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் நிலைக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டு, தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் பயங்கரவாதிகளால், எந்த தாக்குதலையும் நடத்த முடியவில்லை. ஆனாலும், ஜம்மு - காஷ்மீருக்குள், பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய, பாகிஸ்தான் தீவிரமாக முயற்சித்து வருகிறது.


சதி திட்டம்:

உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் அடுத்த மாதம், குளிர் துவங்கிவிடும். அதற்குள், ஜம்மு - காஷ்மீருக்குள், பயங்கரவாதிகளை அதிகளவில் ஊடுருவச் செய்ய பாக்., முயற்சித்து வருகிறது. இதற்காக, எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், 20 பயங்கரவாத பயிற்சி முகாம்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. ஒவ்வொரு முகாமிலும், 50 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

அத்துடன், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியிலிருந்து, காஷ்மீருக்குள் ஊடுருவ, 20 இடங்களையும், பாகிஸ்தான் தேர்வு செய்துள்ளது. பயிற்சி முடிந்த பயங்கரவாதிகள், இந்த இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள், நேரம் பார்த்து, காஷ்மீருக்குள் ஊடுருவ காத்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

இது பற்றி ஜம்மு - காஷ்மீர், டி.ஜி.பி., தில்பக் சிங் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில், இப்போது, 200 - 300 பயங்கரவாதிகள் மட்டுமே உள்ளனர். இதற்கு மேலும் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க, பாகிஸ்தான் ராணுவம், எல்லையில் தாக்குதலை அதிகரித்து உள்ளது. லஷ்கர் - இ - தொய்பா, ஹிஸ்புல் முஜாஹுதீன், ஜெய்ஷ் - இ - முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து, தாக்குதல்கள் நடத்த சதி திட்டம் தீட்டியள்ளதாக, உள்வுத்துறை எச்சரித்து உள்ளது. அதனால், மாநிலம் முழுவதும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


பாக்., 'ட்ரோன்' அத்துமீறல்:

பஞ்சாப் மாநிலத்தில், இந்திய எல்லைக்குள், பாகிஸ்தானை சேர்ந்த, ஆளில்லா சிறிய ரக விமானமான, 'ட்ரோன்' மீண்டும் ஊடுருவி பறந்ததாக, பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம், பெரோஷ்பூரின் ஹதுசைன்வாலா எல்லை பகுதியில், பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் ஒன்று, நேற்று முன் தினம் இரவு, 12:15 மணியளவில், இந்திய எல்லையை தாண்டி வந்தது. இதனையறிந்த, எல்லைப் பாதுகாப்பு படையினர், உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பஞ்சாப் போலீசார், உளவுத்துறையினர் மற்றும் பி.எஸ்.எப்., வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த ட்ரோன் மூலம், பயங்கரவாதிகளுக்கு, ஆயுதம் வழங்க முயற்சி ஏதும் நடந்ததா என, விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், பஞ்சாபில், ட்ரோன்கள் மூலம், பாகிஸ்தான் ஆயுதங்களை வீசி விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மாதம், ஒரு ட்ரோன் இவ்வாறு செய்ததை கண்டறிந்த, பி.எஸ்.எப்., வீரர்கள், எரிந்த நிலையில், மற்றொரு ட்ரோனை கண்டெடுத்தனர். இதையடுத்து, வான்வெளி மூலம், ஊடுருவ முயற்சி செய்யும், பாக்., சதியை முறியடிக்கும் வகையில், தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என, ராணுவத்திற்கும், பி.எஸ்.எப்., வீரர்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.


2 பயங்கரவாதிகள் கொலை:

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், அவந்திபுராவில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை அவர்கள் சுற்றி வளைத்தனர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
09-அக்-201918:56:21 IST Report Abuse
venkatan Ascertain the spots...watch them..one day make the strike by employing airplanes with targeted swiftness with enmaase. For the followup in the behind make ready weponised airplanes and also loaded missiles.. flash,swift and array of strike materials with meticulous strategy are inevi to compete the destruction enemy camps in a well planned secret mission.
Rate this:
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
09-அக்-201909:39:37 IST Report Abuse
Ram Sekar நாம (இந்தியா) பள்ளிக்கூடங்களை நடத்தி குழந்தைகளை அறிவை வளர்க்கிறோம். முதியோர் பள்ளிக்கூடங்களை கூட நடத்தி படிக்காத முதியவர்களின் அடிப்படை எழுத்துக்கூட்டி படிக்கும் திறமையை வளர்க்கிறோம். அவனுங்க (பாகிஸ்தான்) மதரஸாக்களை நடத்தி அங்கிருக்கும் சிறார்களை பிஞ்சிலேயே 'நஞ்சு"ஊட்டி பொய்களை புகட்டி "மதவாத" எண்ணங்களை வளர்க்கிறார்கள். இளைஞர்கள் பல ஆயிரத்தில் "தீவிராவாத" பள்ளிகளில் பயிற்சி கொடுக்கிறார்கள். இதுதான் நமது பாரத நாட்டிற்கும் ""தீவிரவாத"" பாகிஸ்தானுக்கும் மக்களுக்கு "கல்வி" கொடுப்பதில் உள்ள வித்தியாசம்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
09-அக்-201909:11:19 IST Report Abuse
தமிழ் மைந்தன் நாராயணசாமி போல சோதனை நடத்த உத்தரவிடும் அதிகாரம் இப்போ யாருக்கு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X