பொது செய்தி

இந்தியா

'பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அரசின் அணுகுமுறை மாறியுள்ளது'

Updated : அக் 09, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

காஸியாபாத்: 'பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாம் தகர்க்கப்பட்ட சம்பவம், பயங்கரவாதத்தை ஒழிப்பதில், மத்திய அரசின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும், உறுதியையும் உணர்த்துகிறது' என, விமானப் படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதுரியா தெரிவித்தார்.



latest tamil news



இந்திய விமானப்படை தினம், நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள், தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.


அணிவகுப்பு:


உத்திர பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள, ஹிண்டன் விமானப் படை தளத்தில், கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விமானப்படையின் அணிவகுப்பு மரியாதையை விமானப்படை தலைமை தளபதி பதுரியா ஏற்று கொண்டார்.


latest tamil news



நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நம் அண்டை நாட்டில் இருந்து தொடர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் கவலை அளிக்கின்றன. ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், நமது வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், அதை நன்கு உணர்த்துகின்றன. எனவே, நாட்டின் பாதுகாப்பில் விமானப் படை வீரர்கள், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

நம் புவி அரசியல் சூழலில், அதிக அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால், தேசிய பாதுகாப்பில் நிறைய சவால்களை சந்தித்து வருகிறோம். எனவே, இதை எதிர்கொள்ள, எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டியது மிக மிக அவசியமாகிறது. நம்மிடம் வாலாட்டும் பயங்கரவாதிகளுக்கு, நம் பதிலடி எப்படி இருக்கும் என்பதை, பாலகோட் தாக்குதல் உள்ளிட்ட பல முயற்சிகள் வாயிலாக நாம் நிரூபித்துள்ளோம். எதிர்காலத்தில், இப்படிப்பட்ட அச்சுறுத்தல்களை சமாளிக்க, நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

பாலகோட் பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்ததில், நமது வீரர்களும், படைப்பிரிவினரும் ஆற்றிய அரும்பணி என்றும் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியது. அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.


latest tamil news




விருது:


'ரபேல்' உட்பட, பல நவீன போர் விமானங்கள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்வதில், இந்திய விமானப்படை முனைப்பு காட்டி வருகிறது. இதில், நாம் பெரும் பாய்ச்சல் காட்டி வருகிறோம். ஆனாலும், போர் தளவாடங்களை, உள்நாட்டிலேயே தயாரிக்கும், 'மேக் இன் இந்தியா' திட்டத்திலும் புதிய உயரங்களை எட்டி வருகிறோம்.

பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாம் தகர்க்கப்பட்ட சம்பவம், பயங்கரவாதத்தை ஒழிப்பதில், அரசின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும், உறுதியையும் உணர்த்துகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழக வீரர், அபிநந்தன் வர்த்தமான், 'மிக் - 21 பைசன்' ரக விமானத்தை, தலைமையேற்று சாகச நிகழ்ச்சிகள் செய்து காட்டியது, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும், பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை தகர்த்த, இந்திய விமானப் படையின் '51 ஸ்குவாட்ரன், 9 ஸ்குவாட்ரன்' படை பிரிவினருக்கு, தலைமை தளபதி பதுரியா, விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
09-அக்-201904:29:21 IST Report Abuse
blocked user ஒரு தீவிரவாதியை அனுப்பினால் நூறு பாக்கிகளை கொன்றால் அடுத்து பயப்படுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X