அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் மீது ராமதாஸ் பாய்ச்சல் - வன்னியருக்கு தனி ஒதுக்கீடு அறிவிப்பு

Added : அக் 08, 2019 | கருத்துகள் (21)
Advertisement
ஸ்டாலின் மீது ராமதாஸ் பாய்ச்சல் - வன்னியருக்கு தனி ஒதுக்கீடு அறிவிப்பு

சென்னை : 'வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவோம் என, ஸ்டாலின் கூறுவது, ஆடு நனைகிறதே என்று, ஓநாய் அழுவதற்கு இணையானது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்; முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும்' என்பது உட்பட, ஏராளமான வெற்று வாக்குறுதிகளை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வி அடைவது மட்டுமின்றி, 'டிபாசிட்' வாங்க முடியாதோ என்ற அச்சம், அவரை, இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது.

கற்பனை லோக்சபா தேர்தலில், நகை கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை அளித்து, மக்களை கடனாளி ஆக்கியவர், ஸ்டாலின். இப்போது, வன்னியர்கள் ஓட்டுக்களை சுரண்டும் நோக்குடன், பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளார். வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலின் போதே, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது என்பதை கூட உணராமல், கற்பனையில், ஸ்டாலின் மிதக்கிறார்.
வாய்ப்பில்லை வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டில் துரோகம் இழைத்தவர் கருணாநிதி. வன்னியர்கள் போராட்டத்தால் தான், இடஒதுக்கீடு கிடைத்ததே தவிர, தி.மு.க., அதை பெற்று தரவில்லை. சமூக நீதி வரலாறு எல்லாம், அப்போது, வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த, ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவோம் என, ஸ்டாலின் கூறுவது, ஆடு நனைகிறதே என்று, ஓநாய் அழுவதற்கு இணையானது.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
09-அக்-201919:33:29 IST Report Abuse
Ramakrishnan Natesan அன்னே சரஸ்வதி காலேஜ் எப்படி வந்தது விளக்குவீரா
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
09-அக்-201919:32:51 IST Report Abuse
Ramakrishnan Natesan ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற துப்பு இல்லை பேச்சை பார் நாளொரு கூட்டணி மாதமொரு கூட்டணி நீ எல்லாம் பேசவே கூடாது
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
09-அக்-201915:47:25 IST Report Abuse
சுந்தரம் மருத்துவர் ஐயா தனது கடந்த காலங்களில் தான் நடந்துகொண்ட விதம் பற்றியவைகளை மனத்தில் நிறுத்தி இப்போது ஸ்டாலினை சாடலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X