அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் சீனா - இந்தியா பேச்சு: பா.ஜ., அரசுக்கு ஸ்டாலின் நன்றி

Updated : அக் 09, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (43+ 33)
Advertisement
BJP,DMK,தமிழகம்,சீனா,இந்தியா,பேச்சு,பா.ஜ., அரசு,ஸ்டாலின், நன்றி

சென்னை : 'சீன அதிபருடன், பிரதமர் மோடி நடத்தும் நல்லுறவு பேச்சு, மாமல்லபுரத்தில் நடப்பது, தமிழகத்துக்கு பெருமை தரக்கூடியது. இதற்கு, தமிழகத்தை தேர்வு செய்த, மத்திய அரசுக்கு நன்றி' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: இந்தியாவை போல, பழம்பெருமையும், பண்பாடும், நாகரிகமும், நீண்ட நிலபரப்பும், உலகில் அதிக மக்கள் தொகையும் உடையது சீனா. அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வருவதால், பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். சீன பிரதமரை வருக வருக என, மனதார வரவேற்கிறேன். பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கிய மாமல்லபுரத்திற்கு, ஜி ஜின்பிங் வருவது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது.

தமிழகத்துக்கும், சீனாவுக்குமான பண்பாட்டு உறவுகள், வணிக தொடர்புகள், இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. இது, மன்னாராட்சி காலங்களில் இருந்தே தொடர்கிறது. பல நுாற்றாண்டுகளுக்கு முன், தமிழகத்திற்கும், சீனாவுக்கும் வர்த்தக தொடர்புகள் உண்டு. அதனால் தான், சீன பயணியும், புத்த துறவியுமான யுவான் சுவாங், தமிழகத்தை காண வந்தார். அவர் வந்து சென்ற மிக முக்கியமான ஊர், பல்லவர் தலைநகரமாக இருந்த காஞ்சிபுரம். அந்த மாவட்டத்துக்கு, சீன அதிபர் வருகிறார்.

ஒரு தேசத்தின் அதிபர், தமிழகம் வருவது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தரக் கூடியது. அவரை, தி.மு.க., சார்பில் மனதார வரவேற்கிறேன். சீன அதிபருடன், நம் பிரதமர் மோடி நடத்தும், இருநாட்டு நல்லுறவு பேச்சு, தமிழகத்துக்கு பெருமை தரக்கூடியது. இந்த பேச்ச நடத்த, தமிழகத்தை தேர்வு செய்த, மத்திய அரசுக்கு என் நன்றி. இந்த பேச்சு, இரண்டு நாட்டிற்கு மட்டுமல்ல, உலக சமுதாயத்திற்கும் ஒளி தருவதாக அமையட்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (43+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கூடுவாஞ்சேரி கோகிலா கறுப்பு பலூன் பறக்க விடாமல் இருந்தால் சரி தான்.
Rate this:
Share this comment
Cancel
Arasu - Ballary,இந்தியா
09-அக்-201918:11:39 IST Report Abuse
Arasu தமிழ் நாட்டில் நம்பியாரை பிடிக்கவில்லை என்று அவரது எதிரி என நினைத்து மாயாண்டிக்கு வாக்களித்துக்கொண்டு இருப்பதை சற்று யோசியுங்கள். மடியில் கணம் இல்லாதவன் மட்டுமே ஹீரோவாக இருக்கமுடியும் நம்பியாரை எதிர்ப்பதற்கு. மடியில் கணம் இருப்பவர்கள் எல்ல்லாம் மாயாண்டிகளே. இங்கே வீரம் பேசிவிட்டு அங்கே இதோ வந்துட்டேன் எஜமான் என்று மண்டியிடுவார்கள். ஆகவே நம்பியாரை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிலர் (???) அவரது எதிரியாக பாவித்து மாயாண்டிக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-அக்-201915:56:51 IST Report Abuse
Natarajan Ramanathan மோடியும் சீன அதிபரும் தமிழில்தான் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்....... இல்லையேல் சீன அதிபர் செல்லும் பாதை எங்கும் போராட்டம் நடத்துமா தீயமுக?
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
09-அக்-201916:30:43 IST Report Abuse
Anandமோடியை மட்டுமே வலியுறுத்துவோம், சீன அதிபரை வலியுறுத்தினால் உண்டியல் குளுக்கீஸ் கோபித்துக்கொள்ளும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X