காஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு மாறியது நெஞ்சம்! 'பாக்., - இந்தியா தீர்த்துக் கொள்ளும்' என அறிவிப்பு

Updated : அக் 09, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
Pakistan,பாகிஸ்தான்,சீனா,China,காஷ்மீர்,India,இந்தியா

பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள நிலையில் ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் அதன் நிலைப்பாடு மாறியுள்ளது. 'காஷ்மீர் பிரச்னை குறித்து இந்தியா - பாக். பேச்சு நடத்தி தீர்த்துக் கொள்ளும்' என சீனா கூறியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கு நமது அண்டை நாடான பாக். கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும் பிரச்னையை எடுத்துச் சென்றுள்ளது.

கடந்த மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது சபை கூட்டத்திலும் இந்தப் பிரச்னை குறித்து பாக். பிரதமர் இம்ரான் கான் பேசினார். பாக்.குக்கு ஆதரவாக அந்தக் கூட்டத்தில் அதன் நெருங்கிய நட்பு நாடான சீனா குரல் எழுப்பியது. ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீ 'ஜம்மு - காஷ்மீர் பிரச்னைக்கு ஐ.நா. விதிகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்' என்றார்.

இதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 'காஷ்மீர் விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையீட்டை ஏற்க முடியாது' என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாக். பிரதமர் இம்ரான் கான் சீனாவுக்கு சென்றுள்ளார். அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லி கேகியாங்க், தேசிய மக்கள் காங். தலைவர் லி ஜான்சு ஆகியோரை அவர் சந்தித்துள்ளார். பாக். ராணுவத் தளபதி காமர் ஜாவேத் பஜ்வாவும் சீனா சென்றுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த வாரத்தில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் ஆலோசனைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. ஜின்பிங்கின் பயணத் தேதி குறித்த விபரம் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அக். 11ல் அவர் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக். பிரதமர் இம்ரான் கானின் பயணம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங்க் ஷாங்க் கூறியதாவது: சீனா - பாக். இடையேயான நட்புறவு மிகவும் ஆழமானது. பல்வேறு விவகாரங்கள் குறித்து சீன அதிபர் ஜின் ஜின்பிங் உள்ளிட்டோருடன் இம்ரான் கான் ஆலோசனை நடத்தினார். சீனா - பாக். பொருளாதார ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் மிகுந்த பலன்கள் கிடைக்கும்.

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரியாக தெளிவாக உள்ளது. காஷ்மீர் உள்பட இரு தரப்பு பிரச்னைகள் குறித்தும் இந்தியாவும் பாக்.கும் பேச்சு நடத்திட வேண்டும். பரஸ்பரம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தீர்வு ஏற்பட வேண்டும். இரண்டு நாடுகளின் நலனுக்காக மட்டுமல்லாமல் உலக நாடுகளின் எதிர்பார்ப்புக்காகவும் பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பாக்.குக்கு ஆதரவாக சீனா குரல் கொடுத்திருந்தது. இந்நிலையில் 'இந்தியா - பாக். பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும்' என சீனா கூறியுள்ளது. சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வர உள்ள நிலையில் அதன் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள மற்றொரு வெற்றியாக கருதப்படுகிறது.


'பேசி தீர்க்கலாம்'

இந்தியாவுக்கான சீன துாதர் சன் வேய்டாங் கூறியதாவது: இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்து பேச்சு நடத்தி தீர்வு காணலாம். இரு நாடுகளுக்கு இடையேயான நல்ல உறவுக்கான முயற்சிகள் நடக்கும் அதே நேரத்தில் இந்தப் பேச்சையும் நடத்தலாம். இரு நாடுகளுக்கும் இடையே ராணுவத் தொடர்பு ஏற்படுவதுடன் அரசியல் ரீதியில் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர வேண்டும்.

பிராந்திய அளவில் இரு நாடுகளும் அமைதியான முறையில் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதற்கு இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு உறுதுணையாக இருக்கும். இரு நாடுகளும் பொறுப்புடன் செயல்படுவதால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா - சீனா எல்லையில் ஒரு தோட்டாக்கூட பாயவில்லை. பேச்சு மூலமே தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandrasekaran Balasubramaniam - ERODE,இந்தியா
09-அக்-201918:44:39 IST Report Abuse
Chandrasekaran Balasubramaniam இதில் ஒன்றும் பெரிய அதிசயமில்லை . அதிபர் ஒருவர் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது,சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு எதிராக மாறுபட்ட கருத்துக்களை சொல்லமாட்டார்கள் .
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
09-அக்-201915:34:13 IST Report Abuse
இந்தியன் kumar சீனாவுடன் அதிக நெருக்கமும் வேண்டாம் அதிக விலகல்களும் வேண்டாம் .
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
09-அக்-201915:11:55 IST Report Abuse
narayanan iyer இப்போ பாகிஸ்தான் தனிமை படுத்தப்பட்டுவிட்டது . ஆகவே ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பாகிஸ்தான் போய் இம்ரான்கானிடம் பேசி காஷ்மீரை இந்தியாவிடம் கொடுத்துவிட சொல்லவும் . அமைதி பாதைக்கு அழைத்துவரவும் .
Rate this:
Anandan - chennai,இந்தியா
12-அக்-201904:20:21 IST Report Abuse
Anandanஎல்லாத்துக்கும் காங்கிரஸ் செய்யணும், இல்லைனா திமுக செய்யானும் அப்புரம் நீங்க என்னத்துக்கு ஆட்சியில இருக்கீங்க? அட மறந்துட்டேங்க, எல்லோரையும் குறை சொல்ல அல்லவா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X