'ரபேல்' போர் விமானம் ஒப்படைப்பு

Updated : அக் 09, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (20+ 156)
Advertisement

மெரிக்நாக்: ஐரோப்பிய நாடான பிரான்சுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி முதல் 'ரபேல்' போர் விமானம் நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை செய்தார். பின்னர் அதில் அவர் பயணம் செய்தார்.





36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்துடன் 59,000 கோடி ரூபாய்க்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது. முதல் ரபேல் விமானத்தை பெற்றுக் கொள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றார். அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பேச்சு நடத்தியபிறகு, டஸால்ட் நிறுவன உற்பத்தி ஆலைக்கு சென்றார். அங்கு நடந்த விழாவில், முதல் ரபேல் விமானத்தை ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர் இந்திய விமானப்படைக்கு ரபேல் மேலும் வலுசேர்க்கும் என்றார்.


இந்திய விமானப் படைக்கு 36 போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் 2016ல் கையெழுத்தானது. அதன்படி பிரான்ஸ் நாட்டின் 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் இந்த போர் விமானங்களை தயாரித்து வருகிறது. அதில் முதல் போர் விமானம் பிரான்சின் மெரிக்நாக் பகுதியில் உள்ள டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் ஆலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் ராணுவத் துறை பெண் அமைச்சர் புளோரன்ஸ் பார்லே இந்திய விமானப் படை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






ஆயுத பூஜை:


விஜயதசமி தினத்தின்போது ஆயுத பூஜை செய்வதை ராஜ்நாத் சிங் வழக்கமாக வைத்துள்ளார். விஜயதசமி தினமான நேற்று தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட போர் விமானத்துக்கு அவர் ஆயுத பூஜை செய்தார். குங்குமத்தில் 'ஓம்' என்று விமானத்தில் அவர் எழுதினார். மலர்கள் தூவியும் தேங்காய் உடைத்தும் வழிபட்டார். பின்னர் எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டு அதன் மீது போர் விமானம் ஏற்றப்பட்டது.




Advertisement



சிறப்பான நாள்:


போர் விமானத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங் கூறியதாவது: நமது விமானப் படை உலகின் நான்காவது மிகப் பெரிய விமானப் படையாக உள்ளது. தற்போது 'ரபேல்' போர் விமானங்கள் இணைவதால் அது மேலும் வலு பெறுகிறது. விஜயதசமி தினத்தில் போர் விமானத்தை பெற்றது சிறப்பு. அதைவிட இந்திய விமானப் படை தினத்தில் இதைப் பெற்றுள்ளது மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்த நாள் விமானப் படையின் வரலாற்றில் மிகச் சிறப்பான நாளாகும். இந்தியா பிரான்ஸ் இடையேயான ராணுவ நட்புறவில் இந்த நாள் ஒரு மைல்கல்லாகும். இவ்வாறு அவர் கூறினார்.






பயணம்:


முதல் 'ரபேல்' போர் விமானம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் வாங்க உள்ள 36 விமானங்களில் நான்கு விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு வர உள்ளன. அனைத்து விமானங்களும் 2022 செப்.க்குள் ஒப்படைக்கப்பட உள்ளன. பூஜைகள் செய்த பிறகு ரபேல் போர் விமானத்தில் சிறிது தூரத்துக்கு ராஜ்நாத் சிங் பயணம் செய்தார்.






அதிபருடன் சந்திப்பு:


பிரான்ஸ் சென்றுள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாரிசில் அந் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோனை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்தும் குறிப்பாக ராணுவ உறவுகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.






தளபதிக்கு கவுரவம்:


நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ள போர் விமானத்தின் வால் பகுதியில் 'ஆர்.பி. 001' என்று எழுதப்பட்டுள்ளது. தற்போது விமானப் படையின் தளபதியாக உள்ள ராகேஷ் பதூரியா படையின் துணைத் தளபதியாக இருந்தபோது ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தானது. சிறப்பான முறையில் பேச்சு மற்றும் பேரம் நடத்திய அவரை கவரவிக்கும் வகையில் முதல் விமானத்தில் அவருடைய பெயரை குறிக்கும் வகையில் ஆர்.பி. - 001 என எழுதப்பட்டுள்ளது.







Advertisement




வாசகர் கருத்து (20+ 156)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-அக்-201901:47:01 IST Report Abuse
தமிழ்வேல் 2016 இல் காங்கிரஸ் ஒப்பந்தம் போடும்போதே, அப்போதும் றபாலின் குறைகள் பற்றி நான் எழுதியதாக ஞாபகம்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-அக்-201901:45:37 IST Report Abuse
தமிழ்வேல் நல்லவனுடைய மடத்தனமான செருகல் // இந்தியா பாதுகாப்பில்லாமே இருக்கணும் -ன்னு வஞ்சகமா நினைக்காத ஆளு ......... //
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-அக்-201901:43:33 IST Report Abuse
தமிழ்வேல் // எந்த ஒரு நாடும் வாங்கினது கெடயாதுன்னா, எதுக்கு காண் கிராஸ் வாங்க ஒப்பந்தம் போட்டது பாசு? // அதனால்தான் காங்கிரஸ் ஒப்பந்தம் போட்டும் வாங்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X