பொது செய்தி

இந்தியா

நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்...

Added : அக் 08, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்...

தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் நினைத்த நேரத்தில் ஒருவரை தொடர்பு கொள்ள முடிகிறது. இதற்கு முன் தகவல் பரிமாற்றத்துக்கு கைகொடுத்தது தபால் நிலையங்கள் தான். 1874ல் உலக தபால் அமைப்பு சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக 1969 முதல் ஆண்டுதோறும் அக்., 9ம் தேதி உலக தபால் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தபால் வாரமாக (அக்., 9 - 15 ) கடைப்பிடிக்கப் படுகிறது.

தபால் துறையின் மகத்துவம் பற்றி, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது தபால் எழுதும் பழக்கம் இல்லாததால், சுயமாக எழுதும் பழக்கம் இளைஞர்களுக்கு குறைந்து விட்டது. உலகில் தபால்துறை ஏதாவது ஒரு வழியில் மக்களுக்கு இன்றும் பயன்படுகிறது. இந்தியாவில் அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றை, இன்றும் தபால் துறை தான் கையாள்கிறது.


புறா துாது:

பல ஆண்டுகளுக்கு முன், புறாவின் கால்களில் கடிதத்தை கட்டி தகவல்கள் அனுப்பப்பட்டன. மன்னர்கள் ஆட்சியின் போது ஒற்றர்கள் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டன. பின் தகவல்கள் தபால் துறை மூலமாக பரிமாறப்பட்டன.


இந்தியா எப்படி?

இந்திய தபால் துறை 1854ல் துவக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது நாட்டில் 1.55 லட்சம் தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராம பகுதிகளில் உள்ளன. உலகில் அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 4.33 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தபால் துறை மூலம் வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால்,விரைவு தபால், இ-போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் மற்றும் சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
09-அக்-201910:44:44 IST Report Abuse
சுந்தரம் சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது நாட்டில் 1.55 லட்சம் தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராம பகுதிகளில் உள்ளன. உலகில் அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 4.33 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இது இத்தாலி பப்பு கான் கிராஸ் செய்த மகத்தான மோசடி இந்தியாவை கான் கிராஸ் வளர்க்கவே இல்லை. மஸ்தான் மட்டுமே இந்தியாவை வளர்த்தார் என்று நாஸ்ட்றடாமிஸ் ஏற்கனவே சொல்லிவிட்டார்
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
10-அக்-201922:03:20 IST Report Abuse
Nallavan Nallavanநீங்களும் பாஜக -வில் சேர்ந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே ? உங்கள் கருத்து நூறு சதவிகிதம் செய்தியை ஒட்டியே அமைந்துள்ளது ........
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
09-அக்-201907:15:54 IST Report Abuse
oce தான் அப்போ அனுப்பியது கடிதம் அல்ல. உள்ளம். ஆனால் இப்போ அனுப்பவது என்னையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X