பொது செய்தி

தமிழ்நாடு

வருமான வரி கணக்கு: தமிழகத்தில் குறைவு

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (11)
Advertisement
வருமான வரி,கணக்கு,TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு,குறைவு

சென்னை : நாடு முழுவதும் செப்டம்பர் வரை 5.87 கோடி பேர் 2018 - 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2018 - 19ம் நிதியாண்டுக்கு அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது அபராதத்தடன் கணக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமான உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி உச்சவரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் செய்வது அவசியம்.

இந்நிலையில் செப்டம்பர் வரை கணக்கு தாக்கல் செய்தோரின் விபரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: நாடு முழுவதும் 5.87 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது 2017 - 18ம் நிதியாண்டில் 5.67 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டை விட 20 லட்சம் பேர் அதிகமாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 37.50 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இது 2017 - 18ல் 38.27 லட்சமாக இருந்தது. முந்தைய நிதியாண்டை விட 77 ஆயிரம் பேர் குறைவாக தாக்கல் செய்துள்ளனர். ஆனால் மகாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரேதசம் போன்ற மாநிலங்களில் 2017 - 18ம் நிதியாண்டை விட பல லட்சம் பேர் அதிகமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமே கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
09-அக்-201915:12:09 IST Report Abuse
கல்யாணராமன் சு. தமிழர்கள் நிறைய பேர் (அதாவது வேலை செய்ய தகுதியும், உழைத்து முன்னேற ஆசையும் உள்ளவர்கள்) மற்ற மாநிலங்களுக்கு சென்று பணியில் அமர்ந்து, வருமானம் ஈட்டி, வருமான வரி செலுத்துகிறார்கள் ,,,,,,,,,,,,, அவர்கள் தங்க வசிக்கும் மாநிலத்தில் உள்ள முகவரியில் இருந்து வரி செலுத்துவதால், தமிழ் நாட்டில் இருந்து செலுத்தாத நிலை தோன்றுகிறது ........ தமிழர்கள் வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்று தோன்றவில்லை. ............ வேலையில் சேர்ந்து பணிபுரியும், சொந்த தொழில் செய்து பணம் ஈட்டும் அத்தனை தமிழர்களும் வரி ஏய்ப்பவர்கள் அல்ல ........ அரசியல்வாதிகள், லஞ்சத்தில் புரளும் அரசு அதிகாரிகள், கட்டை பஞ்சாயத்து செய்யும் வக்கீல்கள், அரசியல்வாதிகளின் தயவில் மக்களை உறிஞ்சி கொழிக்கும் மருத்துவர்கள், கட்சியினர் ........ இவர்கள்தான் வரி கொடா இயக்கம் நடத்துகிறார்கள் .........
Rate this:
Share this comment
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
09-அக்-201910:27:57 IST Report Abuse
sankaranarayanan தமிழகத்தில் எதுவுமே வேண்டாம் - நீட் வேண்டாம் - எட்டுவழி சாலை வேண்டாம் - குடன்குளம் அணு உலை விருத்தி வேண்டாம் - நியூட்ரினோ வேண்டாம் - எத்தனால் எடுப்பு வேண்டாம் - மின்கோபுரம் அமைத்தல் வேண்டாம் - எரிவாயு குழாய் அமைக்க வேண்டாம் - மூன்றாவது ஐந்தாவது வகுப்புகளுக்கு பப்லிக் பரீட்சை வேண்டாம் - ஒன்னு கார்டு ஒன்னு ரேஷன் வேண்டாம் - எதுவுமே வேண்டாம் வேண்டாம் - டாஸ்மார்க் கடைகள் அதிகம் வேண்டும் - பிளக்ஸ் போர்டுகள் அதிகம் வேண்டும் - சப்சிடி அதிகம் எல்லாருக்கும் அப்போதும் அதிகம் வேண்டும் - இப்படி இருந்தால் எங்கே வேலை வாய்ப்புகள் உண்டாகும்? எப்படி வரி செலுத்துவார்கள் ?
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
09-அக்-201914:30:05 IST Report Abuse
Rajasஇது எவ்வளவு பேர் என்ற கணக்கு தான். எவ்வளவு வருமான வரி வந்தது என்ற கணக்கு அல்ல. இந்தியாவில் 90 % பேர் வருமான வரியின் பார்டரில் தான் இருப்பார்கள். காரணம் IT வரி விதிப்பு மற்றும் Exemption கள் விலைவாசிக்கு ஏற்றவாறு ஏறவில்லை. ஆனால் விலைவாசிக்கு ஏற்றவாறு சம்பளம் இருப்பதால், IT Slab க்குள் பலர் வந்து விடுவார்கள். இன்னும் சிலர் வீடு வாங்கலாம், நிலம் வாங்கலாம், வாகனம் வாங்கலாம் என்ற ஆசையில் சற்று வருமானத்தை உயர்த்தி போட்டு தனியாக IT க்குள் வந்தது தான் மிச்சம். இவர்களால் கணக்கு ஏறுமே தவிர வரி பெரிய அளவில் வராது....
Rate this:
Share this comment
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
09-அக்-201910:19:04 IST Report Abuse
A.Gomathinayagam தமிழர்கள் வருமானம் குறைந்து வருகிறது. இலவங்களால் சோம்பேறி ஆகிவிட்டான். அனைத்து தமிழக வேலைகளிலும் மற்ற மாநில மக்கள் ஆதிக்கம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X