பெண்களின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (23+ 3)
Advertisement
பெண்கள்,வளர்ச்சி,உறுதி,பிரதமர்,மோடி

புதுடில்லி: 'பெண்களின் வளர்ச்சியை உறுதி செய்வதுடன், அவர்கள் கவுரவத்தையும் பாதுகாப்போம்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

தசரா பண்டிகையையொட்டி, டில்லியில் நேற்று நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில், ராவணன் உள்ளிட்டோரின் உருவபொம்மைகள் எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது: நவராத்திரியின்போது, பெண் தெய்வங்களை நாம் வழிபடுகிறோம். இந்த உணர்வை, தங்களுடைய வாழ்க்கையிலும் தொடர வேண்டும்.

பெண்களுக்கு அவர்களுக்கான உரிமைகள், அதிகாரங்கள் கிடைப்பதுடன், அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். அவர்களுடைய கவுரவத்தை பாதுகாக்க வேண்டும். மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில், உணவுப் பொருட்களை வீணடிக்கக் கூடாது, எரிசக்தியை மற்றும் தண்ணீரை சேமிக்க வேண்டும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று உறுதி ஏற்று, இயக்கமாக செயல்படுத்த வேண்டும்.

பண்டிகைகள் நமது நாட்டில் மிகவும் முக்கியமான நிகழ்வுகள். வரும் தீபாவளி பண்டிகையின்போது, உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய, ஊக்கமளிக்கும், சாதனை புரிந்த பெண் குழந்தைகளை கவுரவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

துவரகா ஸ்ரீ ராம் லீலா சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், 107 அடி உயர ராவணன், கும்பகர்ணன் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (23+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மெய்கண்டான் - Chennai,இந்தியா
09-அக்-201918:55:05 IST Report Abuse
மெய்கண்டான் முதலில் சிகப்பு விளக்கு பகுதிகளை தடை செய்து அங்குள்ள பெண்களின் மறு வாழ்வுக்கு ஏற்பாடு செய்யுங்கள். எத்தனை வருடங்கள் தான் பெண்கள் மட்டும் போக பொருளாகவே வாழ்ந்து கொண்டு இருப்பது? அது மிகவும் அவசியம் என்றால் ஆண்கள் ஜப்பானில் உள்ளது போல் ரோபோக்களை பெற, புழக்கத்தில் கொண்டு வர சட்ட திருத்தம் கொண்டு வாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
09-அக்-201917:38:30 IST Report Abuse
தமிழ் மைந்தன் அந்த பெரம்பலூர் தீம்க உறுப்பினருக்கும் பெரிய கருப்புவுக்கும், ஊழல்தலைவர் மகனுக்கும் பாஜக போராட்டம் நடத்தியதாக தெரியவில்லை ராஜவேலு?........
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
09-அக்-201917:15:32 IST Report Abuse
Rajavel பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தும் கேடுகெட்ட கட்சி பிஜேபி
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
09-அக்-201917:26:23 IST Report Abuse
Chowkidar NandaIndiaஊழல் குற்றவாளி[களு]க்கு ஆதரவாக அறிக்கை விட்டு போராட்டம் நடத்தும் கேவலமான கட்சி கான்க்ராஸ் கட்சி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X