காங்., தள்ளாடுகிறது: சல்மான் குர்ஷித் வேதனை

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (35)
Advertisement

புதுடில்லி: 'லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் வெளியேறியதால், காங்., கட்சி தள்ளாடுகிறது' என, மூத்த தலைவர்களில் ஒருவரான, சல்மான் குர்ஷித் வேதனை தெரிவித்துள்ளார்.







லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்., தலைவர் பதவியில் இருந்து ராகுல் வெளியேறினார். கட்சியின் தலைவராக, அவருடைய தாய் சோனியா மீண்டும் பொறுப்பேற்றார். மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைகளுக்கு, வரும், 21ல் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, சல்மான் குர்ஷித் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, தோல்விக்கான காரணம் குறித்து அனைவரும் இணைந்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். தலைவர் பதவியில் இருந்து ராகுல் வெளியேறியதால், கட்சி தற்போது தள்ளாடுகிறது. கட்சித் தலைவராக சோனியா பொறுப்பேற்றாலும், இடைக்கால ஏற்பாடு என்ற மனஓட்டத்திலேயே அவர் இருப்பதாக தெரிகிறது.






இந்த நிலையில், சட்டசபை தேர்தல் நடக்கும், மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில், கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், இந்த மாநிலங்களில் வெற்றி மற்றும் கட்சியின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
09-அக்-201915:40:11 IST Report Abuse
Baskar கடந்த 50 வருடங்களாக அதிகார போதையி தள்ளாடினார்கள்.இ போது கட்சியும் தள்ளாடுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Nathan - Bengaluru,இந்தியா
09-அக்-201912:51:15 IST Report Abuse
Nathan சோனியாவை வைத்து இங்குள்ள பெரும் தலைகள் கொள்ளையடிக்க போட்ட திட்டம் இந்த அம்மையார் தலைமை பதவிக்கு வந்த கரணம். இதில் அந்த அம்மையார் அவரை சுற்றியுள்ள குடும்பத்தினர் ரொம்ப உஷார் என்பது பிறகு நாடறிந்தது. உங்களை போல் காங்கிரசின் மூத்த தலைவர்கள் செய்த பாவம் இன்று நாடே பரிதவித்து கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் சாபம் உங்களை விட போவதில்லை குறிப்பாக தமிழர்களின் சாபம் உங்களை விட்டொழிக்க போவதுமில்லை.
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
09-அக்-201912:38:03 IST Report Abuse
madhavan rajan தவறான ஒரு தலைவர் வந்தால் அந்த நிர்வாகத்தை மறுபடியும் சரிசெய்ய பல காலம் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. அதைத்தான் இப்போது காங்கிரஸ் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. சோனியா வந்ததே பெரும் தவறு. அப்போதே காங்கிரசுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைப்பது அரிதாகிவிட்டது. அதன்பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காத அளவுக்கு மோசமாகிவிட்டது. இன்னும் அந்த குடும்பத்தையே தலைமைக்கு நம்பும் முதுகெலும்பில்லாத தலைவர்களை வைத்துக்கொண்டு ஆகாயத்தை எட்டிவிட்டது துடித்தால் எப்படி? எளிமையாக வாழ்க்கை நடத்தும் தன்னலமற்ற தலைவர்களை அங்கு பார்க்கவே முடியவில்லை. செய்வதனைத்தும் தவறான வேலை. பேசுவது நேர்மையாளர்களைப்போல. மக்கள் அதை நம்பவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பு வேறு. கட்சி மீண்டு வருவது மிகவும் கஷ்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X