காங்., தள்ளாடுகிறது: சல்மான் குர்ஷித் வேதனை| Dinamalar

காங்., தள்ளாடுகிறது: சல்மான் குர்ஷித் வேதனை

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (35)
Share

புதுடில்லி: 'லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் வெளியேறியதால், காங்., கட்சி தள்ளாடுகிறது' என, மூத்த தலைவர்களில் ஒருவரான, சல்மான் குர்ஷித் வேதனை தெரிவித்துள்ளார்.



latest tamil news




லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்., தலைவர் பதவியில் இருந்து ராகுல் வெளியேறினார். கட்சியின் தலைவராக, அவருடைய தாய் சோனியா மீண்டும் பொறுப்பேற்றார். மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைகளுக்கு, வரும், 21ல் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, சல்மான் குர்ஷித் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, தோல்விக்கான காரணம் குறித்து அனைவரும் இணைந்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். தலைவர் பதவியில் இருந்து ராகுல் வெளியேறியதால், கட்சி தற்போது தள்ளாடுகிறது. கட்சித் தலைவராக சோனியா பொறுப்பேற்றாலும், இடைக்கால ஏற்பாடு என்ற மனஓட்டத்திலேயே அவர் இருப்பதாக தெரிகிறது.


latest tamil news




இந்த நிலையில், சட்டசபை தேர்தல் நடக்கும், மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில், கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், இந்த மாநிலங்களில் வெற்றி மற்றும் கட்சியின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X