எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வித்யாரம்பத்திற்கு மதம் தடையல்ல! நிரூபித்த, 'தினமலர்' வாசகர்கள்

Added : அக் 09, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

விஜயதசமியை ஒட்டி, நம் நாளிதழ் சார்பில், இளம் தளிர்களுக்கு கல்வி புகட்டும், 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி, சென்னையில் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், 750க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன், பெற்றோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.latest tamil news


தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் தினமலர் மாணவர் பதிப்பு மற்றும் எவர்வின் பள்ளி குழுமம் சார்பில் ”அரிச்சுவடி ஆரம்பம்” என்ற குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கான கல்வி பயிற்சி அளிப்பதற்கும் உகந்த நாள், விஜயதசமி. இந்நாளான நேற்று, 'தினமலர்' மாணவர் பதிப்பு மற்றும் 'எவர்வின்' குழும பள்ளிகள் இணைந்து, 'அரிச்சுவடி ஆரம்பம்' என்ற குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் நிகழ்ச்சியை, சென்னையில் நடத்தின.


latest tamil news
வடபழநி ஆண்டவர் கோவில்; பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள, எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி; தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள, சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; மதுரவாயலில் உள்ள, எவர்வின் பப்ளிக் பள்ளி என, நான்கு இடங்களில், இந்நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, மின்னஞ்சல், அலைபேசி, குறுஞ்செய்தி, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பதிவு செய்து, தங்கள் குழந்தைகளுடன், பெற்றோர் உற்சாகமாக பங்கேற்றனர்.


latest tamil news


Advertisement* வடபழநி ஆண்டவர் கோவிலில், 'தினமலர்' வெளியீட்டாளர், இரா.லட்சுமிபதி, 'பூர்வீகா மொபைல்ஸ்' மேலாண் இயக்குனர், யுவராஜ், நீதிபதி, அனிதா சுமந்த், டாக்டர் சுமந்த் சி.ராமன், பரதநாட்டியக் கலைஞர், அனிதா குஹா, ஆன்மிக சொற்பொழிவாளர், ரேவதி சங்கரன், கவிஞர் பிறைசூடன் ஆகியோர், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அரிச்சுவடியை துவக்கி வைத்தனர்.


latest tamil news
சென்னை மாநகராட்சி, சுகாதாரப் பிரிவு துணை கமிஷனர், மதுசூதனன் ரெட்டி குடும்பத்துடன் பங்கேற்று, தங்களின் பிள்ளைக்கு, அரிச்சுவடியை துவக்கினார். வடபழநி ஆண்டவர் கோவில் தக்கார், எல்.ஆதிமூலம், சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். விழாவில், கோவில் துணைக் கமிஷனர் சித்ராதேவி, 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' உரிமையாளர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


latest tamil news
* பெரம்பூர், எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியில், ஜோதிட முனைவர், வித்யாதரன், எவர்வின் கல்வி குழும முதல்வர், புருஷோத்தமன் ஆகியோர் குத்து விளக்கேற்றி, வித்யாரம்பம் செய்து வைத்தனர்.


latest tamil news
* தாம்பரம்-- - வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள, ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், காஞ்சி சங்கர மடத்தின், 70வது பீடாதிபதி, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று, குழந்தைகளை ஆசீர்வதித்தார். சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர், ரமணன், டாக்டர் கற்பகாம்பாள், சங்கரா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர், கிரி சீதாராமன் மற்றும் ஜோதிடர், காழியூர் நாராயணன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

* மதுரவாயல், எவர்வின் பப்ளிக் பள்ளியில், ஜோதிடர் ஷெல்வி, நடன கலைஞர், வித்யா பவானி சுரேஷ், எவர்வின் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி, மகேஷ்வரி புருஷோத்தமன் ஆகியோர், குழந்தையின் கையால், நெல் மணியில், 'அ'கரம் எழுதி, வித்யாரம்பம் செய்து வைத்தனர்.


latest tamil news
மதங்களை கடந்து, 750க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன், 2,500க்கும் மேற்பட்ட பெற்றோர் வருகை தந்தனர். நிகழ்ச்சில் பங்கேற்ற குழந்தைகளுக்கு, 'தினமலர்' சார்பில், புத்தகப் பை, பென்சில், ரப்பர், சிலேட், எழுதுகோல், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.


latest tamil news

தினமலருக்கு நன்றி!குழந்தையை, கல்வி, ஞானங்களில் சிறந்தவர்களின் மடியில் அமர வைத்து, அரிச்சுவடி எழுத வைத்தது, மறக்க முடியாத அனுபவம். தினமலருக்கு நன்றி!

- அ.அம்பிகா, 32, செங்குன்றம்.


சிறப்பான ஆரம்பம்!என் மகனுக்கு, இது சிறப்பான ஆரம்பமாக அமையும் என, நினைக்கிறேன். நிகழ்ச்சியில் பங்கேற்றது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

- ஜி.எஸ்.பிரதாப், பெரம்பூர்


பெருமையாக உள்ளது!ஜோதிடர் வித்யாதரன் மடியில், குழந்தையை அமர வைத்து, அரிச்சுவடி எழுதியது, பெருமையாக உள்ளது.

- கே.கே.கிருஷ்ணன், 35, எண்ணுார்.


தமிழ் கலாசாரம்!அரிச்சுவடி எழுதி மழலைக்கல்வி துவங்குவது, தமிழ் கலாசாரமாக அனைவராலும் பின்பற்றப்படுகிறது. எங்களுக்கு, தமிழ் கலாசாரம் பிடித்துள்ளது. அதனால், நிகழ்ச்சியில் குழந்தையுடன் பங்கேற்றுள்ளோம்.

- அம்பிரின், 28, பெரம்பூர்.


latest tamil news

இது ஒரு விழா!நாங்கள் வீட்டிலேயே குடும்பத்தினருடன் அமர்ந்து, குழந்தைகளுக்கு இவ்வாறு செய்வோம். அதை, ஒரு விழா போல் நடத்துவதால், இதில் பங்கேற்க, குழந்தைகளுடன் வந்தோம்.

- கே.ராதிகா, 30, எண்ணுார்.


சரஸ்வதி கடாட்சம் கிடைக்கும்!அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சிக்கு, என் மகன், ஆசிஷை அழைத்து வந்தோம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும், சிறப்பாக இருந்தன. இந்நிகழ்ச்சியால், குழந்தைகளுக்கு சரஸ்வதி கடாட்சம் முழுதுமாக, கிடைக்கும் என, நம்பிக்கை பிறந்துள்ளது.

- எஸ். கார்த்திகேயன் - கல்பனா, பம்மல்.


நல்ல துவக்கம்!எங்களுக்கு, ரித்திக் சாய், ரிஷிகா ஸ்ரீ என, இரட்டை குழந்தைகள் உள்ளனர். பல துறைகளில் சிறந்து விளங்குவோரின் கைகளால், எங்கள் குழந்தைகளின் எழுத்தறிவை துவக்கி வைத்திருப்பது, நல்ல துவக்கமாக உள்ளது.

எம். தாமோதரன்-- - அபிராமி, அனகாபுத்துார்.

பல துறைகளில் சிறந்து விளங்குவோரின் கைகளால், எழுத்தறிவை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில், என் மகள் பங்குபெற்றது, மனநிறைவை தருகிறது. அவர்கள் போலவே, என் மகளும் சிறந்து விளங்குவாள்.

எஸ்.ஸ்டார்வின் போஸ்-- - பிரியதர்ஷினி, இரும்புலியூர்.


latest tamil news
என் முதல் குழந்தைக்கு, வித்யாரம்பம் செய்யவில்லை. ஆனால், தினமலரின், 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சியால், என் இரண்டாவது குழந்தைக்கு, இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

-எம்.விஜயராணி, மதுரவாயல்.

பிரபலங்கள் மடியில் இருந்து, எங்கள் குழந்தை வித்யாரம்பம் செய்தது, மகிழ்ச்சியாக உள்ளது. 'தினமலர்' நடத்திய நிகழ்ச்சி, பல பெற்றோருக்கு உதவியாக உள்ளது.

-ஜி.பிரேமா, 28, -மதுரவாயல்.

மாறி வரும் காலத்தில், பழமையான விஷயங்களை மறந்து விடுகிறோம். தினமலர் அதைத் திரும்ப கொண்டு வந்துள்ளது. அனைத்து பெற்றோரும், இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

-ஆர்.துளசிதாஸ், 64, -மதுரவாயல்.

குழந்தைகளின் கல்விக்கான ஆரம்பம், இவ்வளவு கோலாகலமாக நடத்துவது மிகப் பெரிய விஷயம். எங்கள் மகனின், அரிச்சுவடி ஆரம்பத்தை வாழ்நாளில் மறக்க முடியாது.

முரளிதரன்- - ஸ்ரீஜா, வண்ணாரப்பேட்டை.

மக்கள் சேவையில் தனித்துவம் பெற்றது, 'தினமலர்' இதழ். அதன் மற்றொரு மைல்கல்லாக, இந்த நிகழ்ச்சி விளங்கியது.

ராஜேஷ்- - மகாலட்சுமி, பாடி.

வித்யாரம்பம் என்பது, குழந்தைகளின் கல்வி அடிப்படை. அதை புனிதமான கோவிலில், அறிஞர்கள் மடியில் அமர்ந்து குழந்தைகள் துவக்குவதை பார்க்கும் போது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

இளங்கோ - -கார்த்திகா, அடையாறு

எங்கள் மகனின் அரிச்சுவடி துவக்கம், இவ்வளவு பிரமாண்டமாக அமையும் என, நாங்கள் நினைத்து பார்க்கவே இல்லை. மனநெகிழ்வாக இருக்கிறது.

பிரகாகரன் - -சிந்து லட்சுமி, போரூர்.

எங்கள் வீட்டில் இருந்து துவக்கினால் கூட, இவ்வளவு நன்றாக துவங்கி இருக்குமா என்பது சந்தேகம் தான். காஞ்சி பெரியவரின், ஆசீர்வாதம் கிடைத்தது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பி.வித்யா,-- பெரும்பாக்கம்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-அக்-201917:15:32 IST Report Abuse
Natarajan Ramanathan சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர், ரமணன் என்ன சொல்லி ஆசீர்வதிப்பார்?........ நிறைய மழை பொழிந்து அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என்றுதானே
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
09-அக்-201908:59:35 IST Report Abuse
chennai sivakumar A very good initiative by Dinamalar. Congrats and keep it up. Next year I expect the figures to 10 fold increase.
Rate this:
Cancel
Pats - Coimbatore,இந்தியா
09-அக்-201908:00:44 IST Report Abuse
Pats , மதம் கடந்த என்று தலைப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X