பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் பள்ளிகளுக்கு சிறப்பு வகுப்புகள்: பாடத்தை முடிக்க முயற்சி

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், சிறப்பு வகுப்புகளை நடத்தி, விடுமுறையால் ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்க, பள்ளி ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.latest tamil newsஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு, ஆகஸ்ட், 5ம் தேதி ரத்து செய்தது. இதைஅடுத்து, மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடையுத்தரவு பிறக்கப்பட்டது. பின், நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து, பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், ஆசிரியர்கள் வருகை தந்த நிலையில், மாணவர்கள் யாரும் வரவில்லை.


முடிவு:


பயங்கரவாதிகள் மற்றம் பிரிவினைவாதிகளால், மாணவர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். இதனால், இரண்டு மாதங்களுக்கு மேலாக, காஷ்மீரில், பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. காஷ்மீரில் உள்ள பள்ளிகளில், இந்த மாத இறுதியில் பொது தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், விடுமுறையால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதை தடுக்க, ஆசிரியர்கள், சிறப்பு வகுப்புகளை நடத்த முடிவு செய்தனர்.


latest tamil newsஇந்த சிறப்பு வகுப்புகளை, பள்ளியில் நடத்தாமல், வீடுகளில் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் தினமும், காலை, 8 மணி முதல், 11 மணி வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள், இந்த வகுப்புகளுக்கு, சாதாரண உடையில் செல்கின்றனர். பல இடங்களில், பெற்றோரே, தங்கள் பிள்ளைகளை இந்த வீட்டு பள்ளிக்கு அழைத்து வந்து, மீண்டும் அழைத்துச் செல்கின்னர். ஆசிரியர்களின் இந்த நடவடிக்கை, பெற்றோர் மற்றும் மாணவர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.


இயல்பு வாழ்க்கை பாதிப்பு:


இதற்கிடையில், மாநிலத்தில், 65வது நாளாக, நேற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. பஸ் போக்குரவத்து, மிக மிக குறைவாகவே இருந்தது. எனினும், சாலையோ கடைகள் திறக்கப்பட்டிருந்தன. தனியார் வாகன போக்குவரத்து, வழக்கம் போல் இருந்தது. மாநிலத்தில், 'லேண்ட் லைன்' சேவை முற்றிலும் சீரமைக்கப்பட்டுவிட்டது. 'மொபைல், இன்டர்நெட்' சேவைகள் மட்டும் இன்னும் சரிசெய்யப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
09-அக்-201909:34:26 IST Report Abuse
suresh kumar அனைத்து தகவல் தொடர்பு தளங்களும் இயங்குகின்றன என மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜாவடேகர் சொன்னாரே?
Rate this:
Share this comment
Rohin - jk ,இந்தியா
09-அக்-201910:06:44 IST Report Abuse
Rohinஏன் லேண்ட் லைனில் பேச முடியாதோ, லேண்ட் லைனும் தகவல் தொடர்பு தான், பாக்கி தீவிரவாதிகளுக்கு மொபைல் போனிருந்தால் உடனுக்குடன் தகவல் அனுப்ப முடியவில்லையே என்ற கவலையோ...
Rate this:
Share this comment
suresh kumar - Salmiyah,குவைத்
09-அக்-201915:39:11 IST Report Abuse
suresh kumarநேற்று மந்திரி சொன்னதாக வந்த செய்தியுடன் இன்றைய செய்தி ஒத்துப்போகவில்லையே...
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
09-அக்-201905:18:59 IST Report Abuse
Pannadai Pandian In Kashmir, Hindus and Buddhist population no problem. all problems are caused by Arab & Wahabi sect. Their mind is infected by Islam. first eradicate islam, everything will be normal.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X