சொகுசு விமானம், 2.5 ஏக்கர் பங்களா, 'பாலிவுட்' விருந்து

Added : அக் 09, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மும்பை : மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, எச்.டி.ஐ.எல்., 'ரியல் எஸ்டேட்' நிறுவன இயக்குனர், சாரங் வதாவனுக்கு சொந்தமான, மேலும் ஒரு சொகுசு விமானத்தை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, எச்.டி.ஐ.எல்., எனப்படும் வீட்டுவசதி மற்றும் கட்டுமானம் என்ற 'ரியல் எஸ்டேட்' நிறுவனம், பி.எம்.சி., எனப்படும், பஞ்சாப் - மாஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில், 6,500 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது. இந்த வழக்கில், எச்.டி.ஐ.எல்., நிறுவன நிர்வாக இயக்குனர் ராகேஷ் வதாவன், அவரது மகன் சாரங் வதாவன் ஆகியோரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சமீபத்தில் கைது செய்தனர். அவர்களுக்கு சொந்தமான, 3,500 கோடி ரூபாய் சொத்துக்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

சாரங் வதாவனுக்கு சொந்தமான, 'பம்பார்டியர் சேலஞ்சர் - 300' என்ற, ஒன்பது பேர் அமர்ந்து செல்லக்கூடிய சொகுசு விமானத்தை, அதிகாரிகள் நேற்று முன் தினம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான விசாரணையின் போது, சாரங்குக்கு சொந்தமாக மேலும் ஒரு விமானம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 'பால்கன்' ரக சொகுசு விமானத்தை, அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

மேலும், மும்பையின் கடற்கரை பகுதியான அலிபாக்கில், சாரங் வதாவனுக்கு, 2.5 ஏக்கர் பரப்பளவில், 22 அறைகளுடன் கூடிய கடற்கரை சொகுசு பங்களா இருப்பது தெரியவந்துள்ளது. இங்கு, 'ஆடி' உட்பட, விலை உயர்ந்த மூன்று சொகுசு கார்கள், கரடு முரடான மலைப் பாதைககளில் ஓட்டக்கூடிய 'டெரைன் மோட்டார் பைக்'குகள், ஒரு விரைவுப்படகு ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கடற்கரை பங்காளவில், பிரபல 'பாலிவுட்' நட்சத்திரங்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிகள், அடிக்கடி நிகழும் என்றும், அதை, சாரங் வதாவன் மற்றும் அவரது மனைவி அனு ஆகியோர் ஏற்பாடு செய்வதும் தெரியவந்தது. பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களுடன், சாரங்கும் அவரது மனைவியும், விருந்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், அந்த பங்களாவில் இடம்பெற்றுள்ளது.

சாரங் வதாவனின் தாயார் மற்றும் மனைவி அனு ஆகியோரிடம், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த கடற்கரை பங்களாவை பறிமுதல் செய்யும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
09-அக்-201909:33:37 IST Report Abuse
Ramachandran Rajagopal இந்த நாட்டில் ஒரு சிலர் சொகுசு வாழ்க்கை வாழ அவர்களுக்கு ஆயிரக் கணக்கான கோடிகள் வங்கி அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு வழங்கி விட்டு அதில் சில ஆயிரம் கோடிகள் பறிமுதல் செய்ததாக விளம்பரம் செய்துவிட்டு தப்பிக்க விடுகின்றனர்.அந்த சொத்துக்களை யாரும் வாங்க முன் வருவது இலை. இந்த குற்றங்களில் ஆட்சி செய்பவர்களுக்கும் பங்குண்டு என்பதால் அரசுப் பணத்தைக் கொடுத்து வங்கிகள் திவாலகாமல் பார்த்துக் கொள்கின்றனர். மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது இத்தகைய குற்றங்கள் செய்யவே.எங்கிருந்து இந்த நாடு முன்னேறும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X