சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு - பேராசிரியர் கைது

Added : அக் 09, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
 சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு - பேராசிரியர் கைது

சென்னை : சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, மாணவர்களை திரட்டிய, திபெத் பேராசிரியரை, போலீசார் கைது செய்தனர்.

திபெத், தனி நாடாக அறிவிக்க வேண்டும் என, சீனாவுக்கு எதிராக, திபெத்தியர்களின் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 11ம் தேதி, சீன அதிபர் ஜி ஜின்பிங், அரசு முறை பயணமாக, சென்னை, மாமல்லபுரம் வருகை தர உள்ளார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, சென்னையில் வசிக்கும் திபெத்தியர்கள் முடிவு செய்துள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேலையூர், ஆதிநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில், மாணவர்கள் போல் தங்கிய, 8 திபெத்தியர்களை, 6ம் தேதி, போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு, வீடு எடுத்து கொடுத்த, திபெத்தை சேர்ந்த டென்சில் நோர்பு, 33, உதவி உள்ளார். இவர், சேலையூரில் தங்கி, கேளம்பாக்கம், படூரில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில், ஆங்கில பேராசிரியராக பணி புரிகிறார். மேலும், திபெத்திய மாணவர்கள் சங்கத் தலைவராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.மத்திய உளவு அமைப்பு கொடுத்த தகவலின்படி, நீலாங்கரை போலீசார், இ.சி.ஆர்., பாலவாக்கத்தில் வைத்து, டென்சில் நோர்புவை, நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-அக்-201909:41:32 IST Report Abuse
A.George Alphonse இவன் எப்படி ஆங்கில பேராசிரியர் வேலையில் நமது மாநிலத்தில் சேர்ந்தான் என்பதை முதலில் விசாரிக்கவேண்டும். மேலும் இனிவரும் குளிர்காலத்தில் நமது நாடு முழுவதும் ஸ்வீட்டெர் விற்கும் இந்த தெபீதியர்கள் மீதும் அரசு ஒரு கண் வைக்கவேண்டும். இவர்கள் மகா டேன்ஜரானவர்கள்.
Rate this:
மாயவரத்தான் - chennai,இந்தியா
12-அக்-201916:22:15 IST Report Abuse
மாயவரத்தான் நீங்கள் சொல்வதுபோல திபெத்தியர்கள் மோசமானவர்கள் அல்ல. அவர்கள் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். நேருவுக்கு பதில் அப்போதே மோடி இருந்திருந்தால் இந்தியாவுடன் இணைந்திருப்பார்கள். நேருவின் பலவீனத்தால் சீனா அவர்கள் நாட்டை அடாவடியாக கபளீகரம் செய்து விட்டது.அதற்காக அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களின் ஆன்மீக,அரசியல் தலைவர் தலாய்லாமாவிற்கு நாம்தான் சீன எதிர்ப்பையும் மீறி அடைக்கலம் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் சீன அதிபர் நம் நாட்டிற்கு வரும்போது நாம் இவர்களை கைது செய்யத்தான் வேண்டும் வேறு வழியில்லை. ஒரு வாரத்தில் விசாரித்து விட்டு, விட்டு விடுவார்கள்....
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
12-அக்-201906:20:38 IST Report Abuse
Pannadai Pandian He tried to spoil Indo-chino relation bundle him to Beijing.
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
10-அக்-201920:20:31 IST Report Abuse
Rajesh தேச துரோக வழக்கு போடுங்க இவன் மீது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X