கெஜ்ரிவால் வெளிநாடு பயணத்துக்கு அனுமதி இல்லை: ஆம் ஆத்மி கண்டனம்

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (14)
Advertisement
கெஜ்ரிவால், வெளிநாட்டு பயணம் அனுமதி இல்லை

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின், டென்மார்க் பயணத்துக்கு, மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறி, ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



தட்ப வெப்ப மாநாடு

இந்நிலையில், ஐரோப்பிய நாடான டென்மார்கில், தட்ப வெப்ப மாற்றம் குறித்த மாநாடு, இன்று துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 100க்கும் அதிகமான மேயர்கள் பங்கேற்கின்றனர்.இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பி, வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி கோரி, கெஜ்ரிவால் விண்ணப்பித்தார். ஆனால் நேற்று வரை அனுமதி வழங்கப்படவில்லை.]




இது பற்றி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், கூறியதாவது:டென்மார்க்குக்கு விடுமுறையில் செல்ல, கெஜ்ரிவால் அனுமதி கேட்கவில்லை. பதில் இல்லைஅங்கு நடக்கும் தட்ப வெப்ப மாநாட்டில் பங்கேற்கவே அனுமதி கேட்டார். மாசு கட்டுப்பாட்டை குறைக்க, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்த மேயர்களுடன் விவாதிக்கவே, டென்மார்க் செல்ல கெஜ்ரிவால் விரும்பினார்.

ஒரு மாதத்துக்கு முன்பே அனுமதி கேட்டு, கெஜ்ரிவால் கடிதம் அனுப்பினார். ஆனால், இதுவரை பதில் வரவில்லை. எங்களிடம் மோடி அரசு, விரோதமாக நடந்து கொள்வதற்கான காரணம் தெரியவில்லை. இவ்வாறு, சஞ்சய் சிங் கூறினார். கெஜ்ரிவால் டென்மார்க் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து, எந்த தகவலும் வரவில்லை.


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramakrishnan - chennai,இந்தியா
09-அக்-201914:32:58 IST Report Abuse
ramakrishnan அவர் டெல்லி மேயர் ஆகிவிட்டாரா? அப்போ ஸ்டேஹுட் கேட்பது நின்று விட்டதா?
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
09-அக்-201910:53:27 IST Report Abuse
Ramalingam Shanmugam list இருக்கா என்று பார்க்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-அக்-201910:16:43 IST Report Abuse
Sampath Kumar அது எல்லாம் போக கூடாது நீ ஏன் போற?? அது எல்லாம் சொல்லக்கூடாது நீ ஏன் சொல்ற?? கில்லி பட டயலாக் மாதுரி இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X