49 பேர் மீது தேசத்துரோக வழக்கு; அரசுக்கு கலாசார அமைப்பு கண்டனம்

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (42)
Share
Advertisement
தேசத்துரோக,வழக்கு, அரசு,கலாசார அமைப்பு,கண்டனம்

மும்பை : இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு இந்திய கலாசார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கும்பல் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பிரபலங்கள் மீது பீஹார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் தேசத்துரோகம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


latest tamil news
இந்நிலையில் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு இந்திய கலாசார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் ஹிந்தி நடிகர் நசிருதீன் ஷா, சினிமா ஒளிப்பதிவாளர் ஆனந்த் பிரதான், வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர், எழுத்தாளர் அசோக் வாஜ்பாய், கல்வியாளர் இரா.பாஸ்கர், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உட்பட பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசுக்கு இந்திய கலாசார அமைப்பு சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள பிரச்னைகள் கூறி அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதுவது தேசத்துரோகமா? நீதிமன்றங்களை தவறாக பயன்படுத்தி மூத்த குடிமக்களின் வாயை அடைக்க முயற்சிக்க கூடாது. 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம். இதை ரத்து செய்யாவிட்டால் இதுபோன்ற குரல்கள் பகிரங்கமாக கிளம்பும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
10-அக்-201911:35:25 IST Report Abuse
Cheran Perumal இவனுங்க ஆளை விட்டே வேணும்ன்னு வழக்கு பதிய வைத்து அதையும் விளம்பரமாக்குறானுக இந்த வியாபாரிங்க.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09-அக்-201914:47:56 IST Report Abuse
Rafi ஜனநாயக அக்கறைக்கொண்ட பிரபலமானவர்கள் இணைந்து அதை நாட்டின் தலைவர் என்ற முறையில் சுட்டிக்காட்டி அதை தடுக்க நடவடிக்கை எடுக்க கடிதம் ஜனநாயக ரீதியில் அனுப்பியதற்கு முறையான நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் அல்லது அதற்கான விளக்கத்தை அவர்களுக்கு முறையாக பிரதமர் தெரிவித்திருக்கலாம், அதை கண்டுகொள்ளாமல் காலம் கடத்தியது கூட பிரபல்யமானவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களுக்கு மறைமுக ஆதரவு கொடுக்கின்றார்கள் என்பதை அரசியல் அறிந்தவர்கள் நன்றாக புரிந்து கொள்ளமுடியும். வழக்கு தொடர்ந்தவர்களுக்கு எதிராக அக்கட்சியோ, அக்கட்சி முன்னணியினர்களோ கண்டனம் யாராவது தெரிவித்தார்களா? இல்லையே, நாடு ஜனநாயக பாதையிலிருந்து விலகி கொண்டிருக்கு என்பதை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
10-அக்-201909:59:40 IST Report Abuse
Chowkidar NandaIndiaநீங்கள் சொன்ன அத்தனை ஜனநாயக அக்கறைக்கொண்ட பிரபலமானவர்கள், சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டபோதோ, கோத்ராவில் அறுபது பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டபோதோ, காஷ்மீரின் பண்டிட்டுகள் அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்டபோதோ, மொத்த நாடே குண்டுவெடிப்புகளாலும், தீவிரவாதத்தாலும் தடுமாறிக்கொண்டிருக்கும்போதோ, எல்லை தாண்டிய பயங்கரவாதம் உச்சத்தில் இருந்தபோதோ, ஒரு புத்தகத்தை தடைசெய்ய நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தபோதோ ஜனநாயக ரீதியில் ஏதும் சொல்லாமல் உமைகளாய் இருந்தது ஏன் என்று கொஞ்சம் சொல்வீர்களா. அப்போதெல்லாம் மவுனமாக இருந்துவிட்டு இப்போதுமட்டும் பொங்கி எழுவது தான் உங்கள் அகராதியில் ஜனநாயகமா. அப்போதும் இந்திய ஜனநாயகநாடு தானே. நீங்கள் சொல்வது போலல்லாமல் அரசியல் பார்வையாளர்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும் இவர்களின் இந்த நாடகம் புரியாமலுமில்லை, இவர்களை யாரும் ஆதரிக்கவுமில்லை. எடுத்ததெற்கெல்லாம் மோடிஜியை குறைசொல்லும் உங்களை போன்றவர்களுக்கு வேண்டுமானால் இந்த நாடக நடிகர்கள் உத்தமர்களாய் தெரியலாம். அவ்வளவே. ஜெய் ஹிந்த்....
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
09-அக்-201912:06:52 IST Report Abuse
Rpalnivelu தேச துரோகிகளின் கூடாராமா இந்த கலாசார அமைப்பு ?
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
10-அக்-201909:59:53 IST Report Abuse
Chowkidar NandaIndiaசந்தேகமில்லாமல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X