பொது செய்தி

தமிழ்நாடு

விடைபெறுகிறது தென்மேற்கு பருவமழை

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
தென்மேற்கு பருவமழை, சென்னை வானிலை

சென்னை : 'நான்கு மாதங்களாக பெய்த, தென்மேற்கு பருவமழை, நாளை (அக்., 10) முதல் குறையத் துவங்கும். வடகிழக்கு பருவமழை, இரண்டு வாரத்தில் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் முக்கிய பருவ மழையாக கருதப்படும், தென்மேற்கு பருவமழை, ஜூனில் துவங்கியது. நான்கு மாதங்களாக நீடித்து, நல்ல மழை பொழிவை தந்தது. வட மாநிலங்களில், ஓராண்டுக்கு தேவையான தண்ணீரை தந்துள்ளது. நாளை (அக்., 10) முதல், இப்பருவ மழை விடைபெறத் துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: வட மாநிலங்களில் இருந்து, பருவ காற்றின் வேகம் படிப்படியாக குறையும். ஒரு வாரத்துக்குள், தென் மாநிலங்களில், மேற்கில் இருந்து வீசும் காற்று குறைந்து விடும். இதையடுத்து, வரும், 20க்குள், வடகிழக்கு பருவ காற்று துவங்கும். இன்றைய வானிலையை பொறுத்தவரை, தமிழகத்தில் பல பகுதிகளில், வெயிலுடன் கூடிய வறண்ட வானிலை காணப்படும்.


latest tamil newsமேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும். மற்ற இடங்களில், வெப்ப சலன மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக, நேற்று (அக்., 08) கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல்லில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு, வானிலை மையம் கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
09-அக்-201912:21:56 IST Report Abuse
mindum vasantham Then merkku paruva Malai nanku peithullathu ,namakkukidaippathu vada kilakku paruva Malai olunga peinju 3 varudam aakirathu ,Inge yaarum nallathu pandra Mari therila Malai peyyumaa
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
09-அக்-201911:47:21 IST Report Abuse
raghavan //அதிகபட்சமாக, நேற்று // Oct 8
Rate this:
Cancel
09-அக்-201910:45:07 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) தென் மேற்கு பருவ மழை தந்த வருண பகவானுக்கு நன்றி, வட கிழக்கு பருவமழை தர போகும் வருணபகவானுக்கு அட்வான்ஸ் நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X