பொது செய்தி

இந்தியா

1,400 கி.மீ., தூரம் பசுமை சுவர்: மத்திய அரசு திட்டம்

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: பருவநிலை மாற்றம் மற்றும் பாலைவனமாதல் ஆகியவற்றை தடுக்க ஆப்ரிக்க கண்டத்தில் செனகலின் தகார் பகுதியில் இருந்து டிஜிபவுடி வரை அமைக்கப்பட்ட பசுமை சுவர் போல், குஜராத்தில் இருந்து டில்லி அரியானா எல்லை வரை 1,400 கி.மீ., தூரம் மற்றும் 5 கி.மீ., அகலம் கொண்ட பசுமை சுவர் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ஆரம்ப கட்டம் குஜராத்தின் போர் பந்தர் முதல், பானிபட்
Government, green wall,  India, பசுமை சுவர், இந்தியா, குஜராத், டில்லி, ஹரியானா,

புதுடில்லி: பருவநிலை மாற்றம் மற்றும் பாலைவனமாதல் ஆகியவற்றை தடுக்க ஆப்ரிக்க கண்டத்தில் செனகலின் தகார் பகுதியில் இருந்து டிஜிபவுடி வரை அமைக்கப்பட்ட பசுமை சுவர் போல், குஜராத்தில் இருந்து டில்லி அரியானா எல்லை வரை 1,400 கி.மீ., தூரம் மற்றும் 5 கி.மீ., அகலம் கொண்ட பசுமை சுவர் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


ஆரம்ப கட்டம்


குஜராத்தின் போர் பந்தர் முதல், பானிபட் வரையிலான பசுமை சுவர் அமைக்கும் திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், பல அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் போது, இது ஒரு மரபு திட்டமாக மாறக்கூடும். குஜராத்தின் போர்பந்தர் முதல் பானிபட் வரை மரக்கன்றுகள் நட்டு, பசுமை கட்டமைப்பு உருவாவதுடன், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி பகுதிகளில், ஆரவல்லி மலை பகுதிகளில், காடுஅழிப்பு மூலம் சீரழிந்த நிலத்தை மீட்க உதவும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன்னரே, ஆப்ரிக்காவில், பசுமை சுவர் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும், இதில் பல நாடுகள் சம்பந்தப்பட்டு உள்ளன. இதனால், இந்த திட்டம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2030க்குள் 26 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை மீட்டெடுக்க இந்தியா முக்கியத்துவம் கொடுத்துள்ளது.


latest tamil news




முக்கியத்துவம்


பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், பாலைவனமாதல் தடுப்பது தொடர்பாக இந்தியாவில் நடந்த ஐ.நா., கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் பசுமை சுவர் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் கிடைப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் . பசுமை சுவர் தொடர்ச்சியாக இருக்காது. ஆனால், பெரிய காடு வளர்ப்பு திட்டம் மூலம், சீரழிந்த ஆரவல்லி வரம்பை குறைக்கும். இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், காடுகள் அழிக்கப்பட்ட இடத்தில் இருந்து திட்டம் துவங்கும். இந்த திட்டத்தில் விவசாயிகள் மற்றும் பிற தனியார் நில உரிமையாளர்களும் சேர்த்து கொள்ளப்படுவார்கள். 26 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை மீட்டெடுக்கும் திட்டத்தில் ஆரவல்லி பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகளவு நிலம் சீரழிந்த மாநிலங்களில், அதிகளவு நிலத்தை பசுமையாக மாற்றுவது போன்ற திட்டங்கள், இந்தியாவின் இலக்கை அடைவதில் மிகப்பெரிய பங்கை அளிக்கும். காடு வளர்ப்பை தவிர்த்து, நீர்வள மேலாண்மை மற்றும் நிலையான பண்மை நடைமுறைகள் மூலம் சீரழிந்த நிலத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன என்றார்.


அபாயம்


நில சீரழிவு மற்றும் பாலைவனமாதல் குறித்த ஆய்வை இஸ்ரோ கடந்த 2016ல் நடத்தியது. இதில், குஜராத், ராஜஸ்தான் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில் நிலங்கள் சீரழிக்கப்பட்டதுடன், பாலைவனமாகும் அபாயம் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


வரவேற்பு


மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
10-அக்-201910:12:04 IST Report Abuse
ரத்தினம் பாராட்டுக்கள், ஊக்கத்துடன் செயல் படுத்த வேண்டும். . இது தான் தொலை நோக்கு பார்வையுள்ள நல்ல அரசு. குவார்ட்டர், கோழி பிரியாணி, மணல் கொள்ளை, இலவசங்களை கொடுத்து ஏமாற்றுவது , மானாட மயிலாட மாத்திரம் அரசின் வேலை அல்ல.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
09-அக்-201918:31:05 IST Report Abuse
pattikkaattaan நம்ம முதல்வரும் இதற்குத்தான் ரொம்ப ஆசைப்படுகிறார் .. பசுமை எட்டுவழி சாலை என்று .. மருத்துவர் ஐயா கட்சி நடத்த விடமாட்டேன் என்று எதிர்க்கிறார்கள் .. பத்தாயிரம் கோடி .. எட்டுவழி .. ஆமா ரோடும் பச்சை கலர்ல இருக்குமா ?..
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
09-அக்-201918:28:52 IST Report Abuse
Somiah M பசுமை சுவரை வெட்டி எடுத்துக் கொண்டு போகாமல் இருக்க வேண்டுமே .நடக்குமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X