பொது செய்தி

இந்தியா

பொருளாதார போட்டி: பின்தங்கிய இந்தியா

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (63)
Share
Advertisement

புதுடில்லி: உலக அளவில் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கி உள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 58 வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 68 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.latest tamil news
ஜெனிவாவில் அமைந்துள்ள உலக பொருளாதார கூட்டமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், இந்த ஆண்டு மிக மோசமான செயல்பாடு கொண்ட பிரிக்ஸ் நாடுகளின் பட்டியலில் பிரேசில் 71 வது இடத்தில் உள்ளது. அதேசமயம் உலக அளவில் அதிக போட்டியான பொருளாதாரத்தை கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது. அதிக போட்டியான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஹாங்காங் 3வது இடத்திலும், நெதர்லாந்து 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5வது இடத்திலும் உள்ளது.


latest tamil news
மேக்ரோ பொருளாதார நிலைதன்மை, சந்தை நிலவரம் ஆகியவற்றில் இந்தியாவின்நிலை உயர்வுடன் காணப்படுகிறது. அதே சமயம், அதிக கட்டுப்பாடு விகிதங்களின் காரணமாக வங்கி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக பொருளாதார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சந்தை நிலவரம் மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்றல் முறைப்படுத்துதல் போன்றவற்றில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


தகவல், தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா பலவீனமாக இருப்பதும், சுகாதார குறைப்பாடு, குறைவான வாழ்க்கை தரம் ஆகியனவே பொருளாதார போட்டி நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்தங்கியதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. சுகாதாரமான வாழ்க்கை தரம் கொண்ட 141 நாடுகளை கொண்ட பட்டியலில் இந்தியா 109 வது இடத்தில் உள்ளது. திறன் வளர்ச்சி பட்டியலில் இந்தியா 107 வது இடத்தில் உள்ளது. திறன் மேம்பாட்டில் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 84வது இடத்திலும், வங்கதேசம் 105 வது இடத்திலும் உள்ளன. நேபாளம் 108 வது இடத்திலும், பாக்.,110 வது இடத்திலும் உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09-அக்-201920:57:14 IST Report Abuse
Rafi அவ்வப்போது உண்மைகள் வெளிவரும்போது, அதை திசை திருப்ப உணர்ச்சியை தூண்டும் செய்திகள் செயற்கையாக உண்டுபண்ணி, உண்மையை மறக்கடிக்கும் செய்திகள் பூதாகரமாக வருவதையும் கண்டு வருகின்றோம்.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09-அக்-201920:45:58 IST Report Abuse
Rafi வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை, பட்டதாரிகள் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்துள்ள நிகழ்வுகள் நடந்தேறிவிட்டது. ஆட்சியாளர்கள் கனவுலகத்தில் இருக்கின்றார்கள், எதார்த்த நிலையை உணர மறுக்கின்றார்கள். கடந்த ஆறாண்டு காலம்மாக வளர்ச்சி என்ற கோஷங்கள் மட்டுமே விண்ணை நோக்கி இருக்கின்றது. கள நிலவரம் பற்றி பொருளாதார நிபுணர்கள் கூறுவதற்கு அச்சப்படும் நிலைக்கு நாடு சென்று கொண்டிருக்கு.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-அக்-201919:13:40 IST Report Abuse
Sampath Kumar நாட்டின் வளர்ச்சில் உண்மையான அக்கறை இருந்தால் இது வர சாத்தியம் குறைவு இங்கே நடப்பது வெறும் அரசியில் அக்க போர் வளர்ச்சி ??? இங்கே கருத்து கூறும் பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை நிமிர்த்த மட்டும் கருத்து சொல்லுங்கள் அடுத்தவனை குறை சொல்லி ஒரு பிரயோசனம் இல்லை
Rate this:
09-அக்-201921:10:38 IST Report Abuse
ஆப்புஅடுத்தவங்களை குறை சொல்லி ஆட்சியைப் புடிச்சாச்சு. போடறேன்னு சொன்ன 15 லட்சத்தக் காணோம், 2 கோடி பேருக்கு வேலை தர்ரதுக்கு பதிலா, ரெண்டு கோடி பேர் வேலையை உருவிடுவாங்க போலிருக்கு. இதையெல்காம் ஏன் செய்யலேன்னு கேட்டா பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நாம யோசனை சொல்லணுமாம். இது எப்புடி இருக்கு?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X