இந்தியாவிற்குள் கள்ளநோட்டுக்களை புகுத்தும் பாக்.,

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (38)
Advertisement

லண்டன் : இந்தியாவில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிப்பதற்காக கள்ளநோட்டுக்களை அச்சிட்டு, இந்தியாவிற்குள் புழக்கத்தில் விட்டு வருகிறது பாக்.,கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக உயர் பணமதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை 3 ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசு பணமதிப்பிழப்பு செய்து, நடவடிக்கை எடுத்தது. ஆனால் தற்போது லக்ஷர் இ தொய்பா, ஜெய்ஷி இ முகம்மது போன்ற பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிப்பதற்காக கள்ள நோட்டுக்களை அச்சடித்து, இந்தியாவிற்கு கடத்தி, புழக்கத்தில் விடும் பணியை பாக்., துவக்கி உள்ளது.

இந்தியாவிற்கு கள்ளநோட்டுக்களை கொண்டு வருவதற்காக நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளின் தூதரக ரீதியிலான உறவை பாக்., தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கள்ள நோட்டுக்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிக தத்ரூபமாக பாக்.,ன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ., தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. 2019 ம் ஆண்டு மே மாதம், ரூ.76.7 மில்லியன் மதிப்புடைய இந்திய ரூபாய் நோட்டுக்களை கடத்தி வந்ததாக காத்மண்டு விமான நிலையத்தில் 3 பாக்., நாட்டினர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செப்.,22 அன்றும் ரூ.1 மில்லியன் இந்திய ரூபாய் நோட்டுக்களை கடத்தி வந்ததாக இந்தியாவின் பஞ்சாப் போலீசார் ஒருவரை கைது செய்தனர். இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதற்கு முன் இந்திய ரூபாய் நோட்டுக்களை போன்று கள்ளநோட்டுக்கள் அச்சடித்து தரும் முக்கிய இடமாக காத்மண்டு விளங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவிற்குள் மீண்டும் கள்ளநோட்டுக்கள் புழக்கத்தில் வருவதை தடுக்க எல்லையில் அனைத்து வகைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
11-அக்-201903:05:09 IST Report Abuse
Ramasami Venkatesan இப்படியே போனால் முழுமையாக காஷ் லெஸ் பரிவர்த்தனை கட்டாயமாகிவிடும். ப சிதம்பரம் நம் பழைய நோட் அச்சிடும் எந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றதாக நாம் ஊடகங்களில் படித்தது உண்மையானால், இதையும் ஒரு பெரும் குற்றமாக இன்றைய அவர் கேஸ்களில் சேர்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-அக்-201920:58:00 IST Report Abuse
Rajagopal நாம் வாழ்க்கையில் எந்த வழியைத் தேர்தெடுக்கிறோமோ அந்த வழியில்தான் நமது முடிவும் வரும். பாகிஸ்தான் மத வெறி, வன்முறையால் ஏற்பட்டது. நாட்டை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடமே இருந்ததே இல்லை. அவரகளது ராணுவம், வெறுப்பை வளர்த்து, நாட்டையே பொருளாதார சீர்குலைவின் விளிம்பில் கொண்டு நிறுத்தி இருக்கிறது. இதன் முக்கிய காரணம், அந்த நாட்டின் பஞ்சாபி பெரும்பான்மைக் கலாச்சாரம். அதில் என்னை ஊற்றுவது இஸ்லாமிய மதம். ஈரானும் சேர்ந்து அவர்களைத் தாங்கள் எதோ உலகை வலிமையால் ஆளுவோம் என்ற அகம்பாவத்தைக் கொடுத்து அவர்களது கண்களை மூடி விட்டது. பெண்மை என்றால் கேவலம் என்பது அந்தக் கண்ணோட்டத்தில் உண்டு. இந்துக்களையும், வங்காளிகளையும் பெண்மை கலந்த, வலிமையற்ற சமூகங்களாக அவர்கள் இன்னும் நம்புகிறார்கள். அதனால்தான் வங்காள பிரதமரை அவர்கள் ஏற்கவில்லை. வங்காள தேசம் பிறந்ததே இந்தக் கண்ணோட்டத்தினால்தான். இப்போது, பாகிஸ்தானிலும், வங்காளதேசத்தில் சம அளவுக்கு மக்கள் தொகை இருக்கிறது. வங்காள தேசம் எப்படி முன்னேறி இருக்கிறது என்று பாருங்கள். s://www.theguardian.com/global-development/2019/oct/09/bangladesh-women-clothes-garment-workers-rana-plaza அவர்கள் நல்ல வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் மத வெறியைத் தேர்ந்தெடுத்தது. மூர்க்க நாடாக பாகிஸ்தான் மாறி விட்டது வருந்தத் தக்க விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
thulakol - coimbatore,இந்தியா
09-அக்-201920:25:21 IST Report Abuse
thulakol காங்கிரஸ் காரண் பா சி வாழ்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X