சனி கிரகத்தின் நிலவுக்கு பெயர் வைக்கலாம் வாங்க..

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

வாஷிங்டன்: சூரிய குடும்பத்தில் சனி கிரகத்தில் 20 புதிய நிலவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றிற்கு மக்கள் பெயர் சூட்ட ஆராய்ச்சியாளர்கள் வாய்ப்பளித்துள்ளனர்.



latest tamil news


சூரிய குடும்பத்தில் அதிக துணை கோள்களை (நிலவுகளை) கொண்ட கோளாக வியாழன் இருந்து வந்தது. வியாழன் கோளில் 79 நிலவுகள் இருக்கின்றன. இந்நிலையில் ஸ்காட் ஷெப்பர்ட் தலைமையிலான விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில் சனி கிரகத்தில் புதிதாக 20 நிலவுகளை கண்டறிந்துள்ளனர். இதனை அமெரிக்காவில் உள்ள சர்வதேச வானியல் ஒன்றியத்தின் சிறு கிரக மையத்தில் ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார். இன்னும் 100 சின்னஞ்சிறிய நிலவுகள் இருப்பதாகவும் ஷெப்பர்ட் கூறினார்.


பெயர் சூட்டலாம்


latest tamil news


இதனால், சனி கிரகத்தில் உள்ள நிலவுகளின் எண்ணிக்கை 82 ஆனது. இதன்மூலம் சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கோள் என்னும் சிறப்பை சனி பெற்றது. கண்டுபிடிக்கப்பட்ட 20 நிலவுகளுக்கும் பொதுமக்கள் பெயர் சூட்டலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதற்காக #NameSaturnMoons என்னும் ஹேஸ்டேக் உடன், தாங்கள் விரும்பும் பெயரும் அதற்கான விளக்கத்தையும் @SaturnLunacy என்னும் டுவிட்டர் பக்கத்தில் பொதுமக்கள் பதிவிடலாம். வரும் அக்., 14 முதல் டிசம்பர் 6 வரை பொதுமக்கள் விரும்பும் பெயரை பதிவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
09-அக்-201918:55:59 IST Report Abuse
Sampath Kumar மந்த நிலவன் என்று பெயர் வை.. மிக பொருத்தமாக இருக்கும்
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
09-அக்-201917:59:31 IST Report Abuse
oce டர்ட்டி மூன் என்று அழைக்கலாம்.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
09-அக்-201917:58:35 IST Report Abuse
oce சனி சற்று கருத்த கிரகம். வான் வெளியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் அண்டம் முழுவதும் பரவிய சூரியனின் ஹீலிய நெருப்பிலிருந்து வெளியேறிய கறிக் கழிவுகள் ஒன்று திரண்டு ஓடி ஒரு இடத்தில் நின்றது. சனி என்ற பெயர் பெற்றது. ஹீலியத்தின் பிதா சூரியின். அதனால் சனியை சூரியனது பிள்ளை என்றனர். நம் முன்னோர்கள் மகா புத்திசாலிகள். இப்படிப்பட்ட புத்தி சாலிகளை வழங்கியது இந்து மதம் ஒன்றே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X