கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: உதித் சூர்யா தந்தை ஜாமின் மனு தள்ளுபடி

Added : அக் 09, 2019 | கருத்துகள் (2)
Advertisement
நீட், நீட் தேர்வு, ஆள்மாறாட்டம், உதித்சூர்யா, தந்தை, வெங்கடேசன், ஜாமின் மனு, தேனி நீதிமன்றம், தள்ளுபடி, Neet, Neet exam, Udit surya, venkatesan,bail, theni court, reject

தேனி: 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர், உதித் சூர்யாவின் தந்தையும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டருமான வெங்கடேசனின் ஜாமின் மனுவை தேனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

‛நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சேர்ந்த மாணவர் உதித்சூர்யா. இவரின் தந்தை, டாக்டர் வெங்கடேசனை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அக்., 3ல், தேனி நீதிமன்றத்தில், டாக்டர் வெங்கடேசன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அன்று மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் விடுமுறையால், விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, 'அக்., 9ல் விசாரிக்கப்படும்' என, நீதிபதி ரூபனா தெரிவித்தார்.

இதன்படி, இன்று(அக்.,9) மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, வெங்கடேசன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
09-அக்-201915:42:45 IST Report Abuse
சீனி இன்னொரு அப்பாவி மாணவனனின் சீட்டை திருடிய பிராடு என்று உறுதியான பின், ஜாமீன் கொடுப்பது தவறு. இவர் ஒன்றும் தெரியாத சாதாரண ஆள் இல்லை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர். லஞ்சம் பணம் இவர்களிடம் நிறைய இருக்கிறது, அது பற்றியும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவேண்டும், இல்லையெனில் 20 லட்சம் லஞ்சம் கொடுத்திருக்க மாட்டார். பின்விளைவுகள் தெரிந்தே பையனை ஆள்மாறாட்ட பாழும் கிணற்றில் தள்ளி, இன்னொரு மாணவனின் சீட்டை பறித்திருக்கிறான். எனவே இது ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றம். இப்படிப்பட்டவர்களுக்கு தண்டனையாக பொதுமக்கள் பயன்படுத்தும் மருத்துவமணை, ரயில்வே ஸ்டேசன் போன்ற கழிப்பறைகளை 10 வருடம் சுத்தம் செய்ய சொல்லவேண்டும், அது தான் சரியான தண்டனையாக இருக்கும். நீதி நிலைனாட்டப்படவேண்டும். இனி யாரும் இன்னொரு நியாமான மாணவரின் சீட்டை திருட முயற்சி செய்யக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
09-அக்-201915:01:13 IST Report Abuse
தமிழ் மைந்தன் திமுக அணி தொடர்ந்து முயற்சி செய்து ஜாமீன் வாங்கிவிடும்..........விசாரிக்க ஆரம்பித்தால் கழகம் கலகமாகிவிடும் என்ற பயம் வந்துவிட்டது.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X