பொது செய்தி

இந்தியா

பொருளாதார சரிவு: இந்தியாவிற்கு பாதிப்பு

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (41)
Advertisement

புதுடில்லி : 2019 ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட உள்ள பொருளாதார சரிவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என சர்வதேச நிதி முனையத்தின் (IMF- International Monetary Fund) தலைவர் கிறிஸ்டாலினா ஜியோர்ஜிவா (Kristalina Georgieva) எச்சரித்துள்ளார்.







தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக ஐஎம்எப் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ்டாலினா, 2019 ம் ஆண்டில் உலகில் உள்ள 90 சதவீதம் நாடுகள் பொருளாதார சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக உலக பொருளாதாரம் தற்போது மந்தமடைந்துள்ளது. இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே பொருளாதார வளர்ச்சியானது படிப்படியாக சரிவை சந்தித்து வருகிறது. இத்தகைய நிலையை எதிர்கொள்ள அனைவரும் இணைந்து செயல்பட்டு, வர்த்தக பாதிப்பு ஏற்படாமல் மீட்டெடுக்க வேண்டும்.






2019 மற்றும் 2020 ம் ஆண்டுகளில் ஏற்படும் உலக பொருளாதார மந்த நிலை, சிலியில் ஜூலை மாதம் ஏற்பட்டதை போன்ற நிலையை உருவாக்கும். இந்த பொருளாதார மந்தநிலை அமெரிக்கா, ஜப்பான் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. சீனாவின் விரைவான வளர்ச்சியும் படிப்படியாக குறையலாம். ஏற்கனவே பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டு வரும் நாடுகள், மேலும் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-அக்-201919:35:57 IST Report Abuse
Malick Raja விதி வலியது என்பார் சிலர் உலகத்துக்கே என்றால் விதிவிலக்கு இந்தியாவுக்கு இல்லையா என்பர் சிலர் அதென்ன அமெரிக்காவுக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து ..ஏன் அவர்களின் பொருளாதாரம் சரியவில்லை .. சிங்கப்பூர் ,ஐரோப்பிய ,சீன ,ஜப்பான் ,கோரிய போன்ற பல நாடுகள் ஏன் பாதிக்கப்படவில்லை என்பர் சிலர் . இந்திய எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியையும் .. ஆளுங்கட்சி கடந்தகாலத்தில் எதிர்க்கட்சிகள் ஆண்டபோது ஆட்சியை சரியாக நடத்தாதன் விளைவு என்று சொல்வார்கள் .. ஆக ஒவ்வொருவரும் இறுதியடையும்போது எப்படி பிறந்தார்களோ அப்படியே இறந்து இறுதியை அடைவார்கள் .. சிந்திப்போருக்கு விளக்கம் தேவை இருக்க வாய்ப்பே இல்லை
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
09-அக்-201919:04:46 IST Report Abuse
Asagh busagh டிஜிட்டல் துறையின் வளர்ச்சியாலும், பல தரப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களினாலும் உலக நாடுகளின் பொருளாதாரம் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது தவிர்க்க முடியாத உண்மை. தொய்வு ஏற்படும் போது ஒரு நாட்டின் அரசியல் அமைப்பையோ, தலைவர்களையோ குறை கூற முடியாது. காற்றுள்ள போதே துற்றிக்கொண்டு சேமிப்பை வளர்ப்பதே நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-அக்-201919:01:29 IST Report Abuse
Sampath Kumar இந்த டக்காட்சி வேலை எல்லாம் எங்களுக்கு தெர்யும் அக்கா உங்க நாடு இன்னும் கொஞ்ச காலத்தில் காணாமல் போக போத்து உஷாரா இருங்க ஹி ஹி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X