அரசியல் செய்தி

தமிழ்நாடு

உற்சாக வரவேற்பு அளிக்க இபிஎஸ் வேண்டுகோள்

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (5)
Advertisement
CHINA, INDIA, MODI, CHENNAI, பிரதமர், மோடி, சீன அதிபர், ஜின்பிங், மாமல்லபுரம், முதல்வர், இபிஎஸ், பழனிசாமி

சென்னை: இந்தியாவிற்கு வருகை தரும் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பு, அக்., 11, 12 தேதிகளில் சென்னை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு அப்பகுதியில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்திற்கு வருகைத்தரும் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு, தமிழக மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
பல்லவ நாட்டின் துறைமுகமாக இருந்த மாமல்லபுரம் தேர்வு செய்தது பொருத்தமாக இருக்கும். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சீனா, தமிழகம் இடையே வணிக, கலாச்சார தொடர்பு இருந்து வந்தது. இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதால் தமிழகத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-அக்-201918:40:05 IST Report Abuse
skv srinivasankrishnaveni உமக்கென்ன ஆங்கிலமலே க்ரேட் கூறுங்களேன் வற்புரையை மயங்கிடுவாரு சீனத்தின் தலைவரு
Rate this:
Share this comment
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
09-அக்-201918:30:37 IST Report Abuse
Mano இனி மாமல்லபுரம் உலக அளவில் பிரபல்யம் ஆகிவிடும், இதன்மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-அக்-201918:14:14 IST Report Abuse
தமிழ்வேல் இத்தினி வருஷமா இந்தியாவுக்கு எதிரியா காண்பிச்சிட்டு, இப்போ.................................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X