ரபேல் விமானத்திற்கு பூஜை: ராஜ்நாத்திற்கு அமித்ஷா ஆதரவு

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (76)
Advertisement
Amit shah, rajnath, rajnath singh, Home minister, defence minister, Rafale, warplane, sashtra pooja, congress, sandeep dixit,  அமித்ஷா, ராஜ்நாத், ராஜ்நாத் சிங், சாஸ்திரா பூஜை, ஆயுத பூஜை, காங்கிரஸ், பா.ஜ., ரபேல், போர் விமானம்,

சண்டிகர்: இந்திய கலாசாரத்தை பின்பற்றியே, ரபேல் விமானங்களுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சாஸ்திரா பூஜை செய்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் போர் விமானம், நேற்று(அக்.,8) ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. விஜயதசமி தினத்தின் போது ஆயுத பூஜை செய்வதை ராஜ்நாத் வழக்கமாக வைத்துள்ளார். விஜயதசமி தினமான நேற்று தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட போர் விமானத்திற்கு பூஜை செய்தார். குங்குமத்தில் 'ஓம்' என்று விமானத்தில் அவர் எழுதினார். மலர்கள் தூவியும் தேங்காய் உடைத்தும் வழிபட்டார். பின்னர் எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டு அதன் மீது போர் விமானம் ஏற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மத நிகழ்ச்சியான விஜயதசமியும், ரபேல் போர் விமானமும் ஒன்றுக்கொன்று பொருந்தாது. நாம் அனைவரும் கொண்டாடும் பண்டிகையை போர் விமானத்துடன் ஏன் இணைக்க வேண்டும் என அக்கட்சியின் சந்தீப் தீக்சித் கூறினார்.
இதற்கு பதிலளித்து ஹரியானாவில் நடந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: ரபேல் விமானத்திற்கு,ராணுவ அமைச்சர் ராஜ்நாத் நேற்று சாஸ்திரா பூஜை செய்தார். இந்திய கலாசாரத்தை பின்பற்றியே பூஜை செய்தார். காங்கிரஸ் இதனை விரும்பவில்லை. விஜயதசமி அன்று சாஸ்திரா பூஜை செய்யக்கூடாதா? காங்கிரஸ் கட்சி, இந்திய கலாசாரத்திற்கு எதிரானது. எதை விமர்சிக்க வேண்டும்; விமர்சிக்க கூடாது என்பதை அக்கட்சி முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
10-அக்-201913:48:32 IST Report Abuse
RM We all Indians. Indian is the common identity for us. Religion is the way we follow. I go to Meenakshi temple at the same time, I respect the churches and Masjid. Extremist are there in every sector of the society . Recently in south part of India where we maintain the amicable relationship with our brothers I have seen the comments here are with poison to the society.
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
10-அக்-201913:35:12 IST Report Abuse
RM எலுமி்ச்சம்பழ பூஜை, ஓம் என எழுதினாலும், பெயர் ரபேல் தான்.கிறிஸ்தவ இறை தூதருக்கு ஆராதனை.ராஜ்நாத்தை பாராட்ட வேண்டும், மதபேதம் பார்க்கலை, இல்லைனா, பேர , ஹனுமான், ராம் எனரபேலுக்கு பதில் மாத்தியிருப்பார்ல ! இந்தியபேரா இருந்திருக்கனும்இதெப்புடி?
Rate this:
Share this comment
Cancel
ராமநாதன் நாகப்பன் ஒரே ஒரு சந்தேகம் தான். அந்த எலுமிச்சம் பழங்களை பிரான்சில் வாங்கினதா இல்ல இந்தியாவிலிருந்து கொண்டு போனதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X