அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீன அதிபர் வருகை: தீவிர கட்டுப்பாடுகள்

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement

சென்னை: சீன அதிபர் தமிழகத்திற்கு வருவதையொட்டி 34 சிறப்பு அதிகாரிகள் மற்றும் 10 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, இந்திய பிரதமர் மோடியை, மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார். இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பு அக்., 11 மற்றும் 12ல் நடக்கிறது. இதற்கு முன்னர் கடந்த 2018 ஏப்ரல் 27 மற்றும் 28 தேதிகளில், சீனாவின் வூஹான் நகரில் இரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நடந்தது. சென்னையில் நடக்கும் 2வது சந்திப்பானது, இரு தரப்பு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள், இந்தியா - சீனா இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு குறித்த கருத்துகளை பரிமாறி கொள்வதற்கான வாய்ப்புகளை மோடிக்கும், ஜின்பிங்கிற்கும் ஏற்படுத்துகிறது.


latest tamil news



அதிகாரிகள் நியமனம்

இதற்காக பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்காக 34 சிறப்பு அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையிட 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பொதுத்துறை செயலர் செந்தில் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில், முக்கிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.


தனி விமானம்

பிரதமர் மோடி சென்னை வருவதற்காக, அமெரிக்க அதிபரின் 'ஏர் போர்ஸ் ஒன்' போன்று அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய 'போயிங் 777' ரக தனி விமானம் தயாராகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-அக்-201912:07:02 IST Report Abuse
ஆப்பு இரண்டு பேருக்கும் ஏகப்பட்ட திருஷ்டி. ராஜ்நாத்தை விட்டு விசேஷ பூஜை செஞ்சு திருஷ்டி கழிக்கச் சொல்லுங்க.
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
09-அக்-201921:22:33 IST Report Abuse
பெரிய ராசு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Rate this:
Cancel
09-அக்-201920:34:13 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா @ஆப்பு, மீனவர்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா சாப்பாட்டுக்கு வருந்துவதற்கு? அவர்கள் தொழில் நிமிர்த்தம் கடற்கரையில் புயல் தாக்கினாலும் பெரிதாக பொருள் இழப்பு ஏற்படாத வீடுகளில் வாழவேண்டியுள்ளது.ஒரு சில நாட்கள் நாட்டின் வளர்ச்சிக்காக மகிழ்ச்சியாக விட்டுக்கொடுப்பார்கள் அந்த உழைப்பாளிகள்.இதில் புகுந்து விரோதத்தை விதைக்க வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X