ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்-பின்வாங்கிய காங்.,

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (10)
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 316 வட்டாரங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் அக்., 24ம் தேதி நடைபெற இருக்கிறது. மாநிலத்தின் நிலைமையை சீராக்கி ஜனநாயக வழிமுறையை தொடங்குவதை நோக்கமாக கொண்டதாக இந்த தேர்தல் கருதப்படுகிறது. 370வது சட்ட பிரிவின் கீழ் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால், முக்கிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. இதனால், கடந்த ஆண்டு முதல் ஜம்மு - காஷ்மீரில் 12,000 பஞ்சாயத்து இடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் சில கட்சிகள் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. வீட்டுக்காவலில் உள்ள மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை தேர்தலை புறக்கணித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது, காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது.
இது தொடர்பாக மாநில காங்., தலைவர் மீர் கூறியதாவது: எங்கள் கட்சித் தலைவர்கள் பலரும் சிறையில் உள்ளனர். தொண்டர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறும் இந்த தேர்தலில் பங்கேற்பது சரியாக இருக்காது. எனவே தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு மீர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
09-அக்-201920:38:28 IST Report Abuse
Pannadai Pandian Young generation of Kashmir will take over, no problem...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-அக்-201919:17:16 IST Report Abuse
Pugazh V இங்கே தமிழக த்தில் சட்ட மன்ற இடைத்தேர்தல் லயே தலைமை இல்லாத பாஜக பின்வாங்கி கிடக்கிறது. தம்மாத்தூண்டு காஷ்மீரில் வெறும் உள்ளாட்சி தேர்தல் ரொம்ம்ம்ப முக்கியம்.
Rate this:
Share this comment
09-அக்-201923:19:10 IST Report Abuse
V Venkatachalam,  Chennai 87உனக்கு ஏன் எரியுது? ஏன் இப்படி பொலம்புறே? உனக்கு அறிவு. ரொம்ம்ம்ப முத்தி போயிருக்கு. ஐயோ பாவம்....
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
10-அக்-201900:01:30 IST Report Abuse
Balajiரொம்ப ஜந்தொஜமா ஜாமிக்கு. டுமீல் நாட்டலோ BJP இல்லேன்னா உலகத்துலயே இல்லேன்னரா மெரி ஒரு பீலிங்கு....
Rate this:
Share this comment
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
09-அக்-201919:00:49 IST Report Abuse
Palanisamy Sekar பாகிஸ்தான் அனுப்பி வைக்கின்ற கள்ளப்பணத்தை வைத்திருந்தவர்களை சிறையில் தள்ளாமல் அறிவாலயத்திலா தங்க வைப்பார்கள்? பயம்..அவ்ளோ பயம்..டெப்பாசிட் வாங்க முடியாதுன்னு தெரிந்ததால்..ஓடுகின்றார்கள் பின்னங்கால் பிடரியில் படும் அளவுக்கு..காங்கிரசை இத்தோடு கலைத்துவிட்டால்..நாட்டுக்கு அது மிக நலல்து..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X