விடுமுறையில் சென்ற ராகுல் : அமித்ஷா

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (13)
Advertisement

பிவானி: அரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் சமயத்தில் ராகுல் விடுமுறைக்கு சென்று விட்டார் என பா.ஜ., தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா, விமர்சித்துள்ளார்.






அரியானாவின் பிவானி பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அமித்ஷா, அரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடக்கும் சமயத்தில் ராகுல் விடுமுறையில் சென்றுள்ளார். சர்ஜிக்கல் ஸ்டிரைக், விமானப்படை தாக்குதல், முத்தலாக், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது என அனைத்தையும் காங்., எதிர்க்கிறது. நான் ராகுலை ஒன்று கேட்க விரும்புகிறேன், அவரது கட்சி அரியானா மாநிலத்திற்காக, மாநில வளர்ச்சிக்காக என்ன செய்தது? என்றார்.





மேலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீரர்களை புகழ்ந்து பேசிய அமித்ஷா, நமது வீரர்கள் பாலகோட்டில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி, பாக்., பயங்கரவாதிகளை கொன்றனர். ஒரு வீரருக்கு கூட பாதிப்பு ஏற்படாமல் திரும்பி வந்தனர். உயிர் தியாகம் செய்த நமது வீரர்களின் மரணத்திற்கு பழிக்கு பழிவவாங்கினர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
10-அக்-201902:50:53 IST Report Abuse
Sanny பப்புவை கண்டிப்பதுபோல் , சுப்பிரமணியன் சுவாமியை அமித்ஷா கண்டிப்பாரா, அவர் கொலைகார ராஜபக்சே கட்சி சார்பில் அவரின் சகோதரன் கோட்டாபய அடுத்தமாதம் நடக்கும் இலங்கை ஜனாதிபதி தேத்தலில் போட்டியிடுகிறார், அவருக்கு இலங்கை தமிழர் வாக்களிக்கணும் என்று அறிக்கை விட்டிருக்கிறார். இலங்கை தமிழரின் வாக்குரிமையை சாமி எப்படி கட்டாயப்படுத்தலாம், கடந்த மாதம் ராஜபக்சேயின் மகனின் திருமணத்துக்கு சு.சாமி சமுகமளித்திருந்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.1983 களிலும் கருணாநிதியுடன் சேர்ந்து டெசோ மாநாடைநடாத்தி இலங்கை தமிழரை ஆயுதம் ஏந்தி போராட ஊக்கம் அளித்தவர் சாமி, பின்னாளில் தமிழனுக்கு எதிராக பல்ட்டி அடித்தவர்.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
09-அக்-201922:44:41 IST Report Abuse
konanki பாவம் பப்பு . எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிப்பார்.அதுதான் ஓடிட்டார்
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
09-அக்-201922:42:25 IST Report Abuse
konanki இதேயே தான் எங்கள் தலைவர் ராகுல் வெளியேறி (ஓடி) விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கூறினார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X