கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சுபஸ்ரீ விவகாரம்: ரூ. 1கோடி இழப்பீடு கேட்டு தந்தை மனு

Added : அக் 09, 2019 | கருத்துகள் (12)
Advertisement
பேனர், சுபஸ்ரீ, இழப்பீடு, சென்னை, ஐகோர்ட்

சென்னை: சென்னை, பள்ளிக்கரணை அருகே, கடந்த செப்., 12ம் தேதி சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில், அவ்வழியே, இருசக்கர வாகனத்தில் சென்ற, குரோம்பேட்டையை சேர்ந்த, தனியார் நிறுவன மென்பொறியாளர், சுபஸ்ரீ, 23, தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த குடிநீர் லாரி அவர் மீது மோதியதில் உயிரிழந்தார்.

இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி, இழப்பீடு வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். அதில், சுபஸ்ரீ உயிரிழந்ததற்கு தமிழக அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும், பேனர் வைப்பதை தடுக்க கடுமையான சட்டம் இயற்றிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விடுமுறைக்கால சிறப்பு அமர்வு நாளை (அக்., 10) விசாரணைக்கு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Sekar - mumbai ,இந்தியா
10-அக்-201900:41:48 IST Report Abuse
Ram Sekar நிச்சயம் அதிகமாக கேட்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-அக்-201921:09:18 IST Report Abuse
Janarthanan சுபஸ்ரீ விவகாரம்: ரூ. 1கோடி இழப்பீடு கேட்டு தந்தை மனு, இதை நான் குறை சொல்ல வில்லை , ஆனால் அவரின் தந்தை அவரின் மகளை ஏன் ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்தவில்லை ??? ஒரு வேலை அன்றைக்கு இந்த சோக சம்பம் நடக்க வில்லை என்றால் இவரை போன்றவர்கள் இன்னும் ஹெல்மெட் அணியாமல் தான் சென்று கொண்டு இருப்பார்கள் ??? அதானே உண்மை ?? இதில் ஒரு கட்சி சார்ந்து உள்ளதால் இவ்வளவு ஹயிலைட் ?? ஆனால் சாலை விதிகளை மதிக்காமல் இறக்கும் உயிர்களின் விலை என்ன ???? அவர்களையும் திருந்த குரல் கொடுங்கள் மக்களே
Rate this:
Share this comment
ram - chennai,இந்தியா
11-அக்-201910:04:41 IST Report Abuse
ramலாரி உடம்பில் ஏறும்போது ஹெல்மெட் போட்டா என்ன போடலைனா என்ன ?...
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
09-அக்-201920:44:32 IST Report Abuse
oce பொதுவாக ஜாதகம் கணிக்கும் போது ஆயுளை கவனிக்க வேண்டும். அந்த ஆயுள் ஆபத்தின்றி நோயின்றி இருக்க கேது பகை ஸ்தானம் அல்லது கெட்டவருடன் சேர்ந்திருக்கலாகாது. ஆயுள் காரகன் சனி வலுவிழந்த நிலையில் எட்டாமிடத்தை துஷ்ட கிரகங்கள் பார்த்தாலும் அதில் இருந்தாலும் வரும் ஆயுள் பங்கத்தை உணர்ந்து ஒரளவு எச்சரிக்கையாக இருக்கலாம்.
Rate this:
Share this comment
Rajesh - Chennai,இந்தியா
10-அக்-201920:27:43 IST Report Abuse
Rajeshஇப்படித்தான் கருது போடுவீர்களா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X