ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம்

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (90)
Advertisement

கலபுரகி : ரபேல் விமானத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பூஜை நடத்தியது ஒரு நகைச்சுவை நாடகம் என காங்., மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.





பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் போர் விமானம், நேற்று(அக்.,8) ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. விஜயதசமி தினத்தின் போது ஆயுத பூஜை செய்வதை ராஜ்நாத் வழக்கமாக வைத்துள்ளார். விஜயதசமி தினமான நேற்று தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட போர் விமானத்திற்கு பூஜை செய்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, இது போன்ற நகைச்சுவை நாடகங்கள் எங்களுக்கு தேவையில்லை. போபர்ஸ் பீரங்கி போன்ற ஆயுதங்கள் வாங்கிய போது இது போன்று நாங்கள் ஏதும் செய்யவில்லை. அவற்றை வாங்குவதற்கு முன் யாரிடமும் காட்டவில்லை.




இந்திய விமானப்படை அதிகாரிகள் தான் அதை நல்லதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். இவர்களை போன்றவர்கள் போய், போர் விமானத்திற்குள் அமர்ந்து புகைப்படத்திற்கு "போஸ்" மட்டுமே கொடுப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.ராஜ்நாத் சிங் ரபேல் விமானத்திற்கு பூஜை செய்ததையும், அதை பார்வையிட்டதையும் மல்லிகார்ஜூன கார்கே இவ்வாறு விமர்சித்துள்ளார். மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த விமர்சனத்திற்கு பா.ஜ., தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரபேல் விமானத்திற்கு ராஜ்நாத் சிங் பூஜை செய்ததற்கு ஆதரவாக மத்திய அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-அக்-201910:22:47 IST Report Abuse
பச்சையப்பன் ஒரு மத சார்பற்ற நாட்டில் போர் விமானத்திற்க்கு எலுமிச்சம் பழம் வைப்பதற்க்காக இங்கிருந்து பிரான்ஸ் சென்று!!! அடேங்கப்பா இதெற்க்கே எத்தனை செலவு?? இந்த செலவெல்லாம் யார் வீட்டு வரிப்பணம்?? அந்த விமான கம்பெனி வாழ்வதற்கு நம் மக்கள் வரி கட்டி சாகிறார்கள். நாடே பிச்சை எடுக்கும் நிலையில் இவ்வளவு ஆயிரம் கோடிகள் செலவழிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
10-அக்-201910:16:48 IST Report Abuse
konanki கார்கே , மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவில் ஹலால் பழக்கம் வேண்டாம் என்று கூறுகிறீர்களா?
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
10-அக்-201910:15:30 IST Report Abuse
konanki தமிழ் வேல், அப்போ அரபிக் மொழியில் வளைகுடா நாடுகளில் மட்டும் தான் ஓத வேண்டும். தமிழ் நாட்டில் அரபிக் மொழியில் பிரார்த்தனை செய்வது தவறு, நிறுத்த வேண்டும் என்று கூறுகிறீர்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X