ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம்| Dinamalar

ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம்

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (90)
Share

கலபுரகி : ரபேல் விமானத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பூஜை நடத்தியது ஒரு நகைச்சுவை நாடகம் என காங்., மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.



latest tamil news


பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் போர் விமானம், நேற்று(அக்.,8) ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. விஜயதசமி தினத்தின் போது ஆயுத பூஜை செய்வதை ராஜ்நாத் வழக்கமாக வைத்துள்ளார். விஜயதசமி தினமான நேற்று தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட போர் விமானத்திற்கு பூஜை செய்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, இது போன்ற நகைச்சுவை நாடகங்கள் எங்களுக்கு தேவையில்லை. போபர்ஸ் பீரங்கி போன்ற ஆயுதங்கள் வாங்கிய போது இது போன்று நாங்கள் ஏதும் செய்யவில்லை. அவற்றை வாங்குவதற்கு முன் யாரிடமும் காட்டவில்லை.


latest tamil news


இந்திய விமானப்படை அதிகாரிகள் தான் அதை நல்லதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். இவர்களை போன்றவர்கள் போய், போர் விமானத்திற்குள் அமர்ந்து புகைப்படத்திற்கு "போஸ்" மட்டுமே கொடுப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.ராஜ்நாத் சிங் ரபேல் விமானத்திற்கு பூஜை செய்ததையும், அதை பார்வையிட்டதையும் மல்லிகார்ஜூன கார்கே இவ்வாறு விமர்சித்துள்ளார். மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த விமர்சனத்திற்கு பா.ஜ., தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரபேல் விமானத்திற்கு ராஜ்நாத் சிங் பூஜை செய்ததற்கு ஆதரவாக மத்திய அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X