பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 14 மாதங்களில் 4 கலெக்டர்கள் மாற்றம்

Updated : அக் 10, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement

மதுரை: ஆளுங்கட்சியில் கொடுக்கப்பட்ட நெருக்கடியால் மதுரை கலெக்டர் ராஜசேகர் விடுப்பில் சென்றுள்ளதாக, தகவல் பரவிய நிலையில், தற்போது மதுரையின் புதிய கலெக்டராக டி.ஜி.வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



latest tamil news



லோக்சபா தேர்தலின் போது, மதுரை ஓட்டு எண்ணிக்கை மையத்தில், பெண் தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்ட அதிகாரிகள் நுழைந்த விவகாரத்தில், கலெக்டராக இருந்த நடராஜன் மாற்றப்பட்டார். தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, நாகராஜன் கலெக்டராக பொறுப்பு ஏற்றார். நேர்மையாக செயல்பட்ட நாகராஜன், அரசியல் தலையீடுகளுக்கு இடம் கொடுக்காமல், அங்கன்வாடி மைய ஊழியர்களை நியமித்தார். இதையடுத்து, அவரை இடம் மாற்றி, அரசு உத்தரவிட்டது.


latest tamil news



சென்னை ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்த ராஜசேகர், ஜூலை 1ல் கலெக்டராக பொறுப்பு ஏற்றார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி, அவர், திடீர் விடுப்பில் சென்றார். ஆளுங்கட்சி தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியால் அவர் விடுப்பில் சென்றதாக, ஊழியர் வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், தற்போது மதுரை கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார். அரியலூர் கலெக்டராக இருந்த டி.ஜி.வினய், மதுரை மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


latest tamil news



கடந்த 14 மாதங்களில் மட்டும் மதுரை மாவட்டத்திற்கு 4 கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-அக்-201912:05:21 IST Report Abuse
ஆப்பு ஆகமொத்தம் நாட்டுக்கு நல்லது எதுவும் நடக்காது போலேருக்கு.
Rate this:
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
10-அக்-201908:34:51 IST Report Abuse
ராஜேஷ் அதிகாரிகளை விட அரசியல்வாதிகள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. அதிகாரிகள் அரசியல்வியாதிகளின் அடிமாடுகள் . அதிகாரிகள் புத்தகத்தை படித்தார்கள் , அரசியல்வியாதிகள் மக்களின் அறியாமையை படிக்கிறார்கள்
Rate this:
Cancel
sugumaran - chennai,இந்தியா
10-அக்-201908:34:15 IST Report Abuse
sugumaran வேளாண்துறையில் மட்டும் ஏன் பல ஆண்டுகளாக உயர் அதிகாரிகள் மாற்றம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X