49 பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய முடிவு

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (66)
Share
Advertisement

லக்னோ: நடிகை ரேவதி, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய பீகார் போலீஸ் முடிவு செய்துள்ளது. பொய் புகார் அளித்தவர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.



latest tamil news



கும்பல் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பிரபலங்கள் மீது பீஹார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் தேசத்துரோகம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.


latest tamil news



இந்நிலையில், 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தவர் உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யாததால், அவர்கள் மீது பதியப்பட்ட தேச துரோக வழக்கை ரத்து செய்ய பீகார் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் தவறான தகவல்களை தெரிவித்து பொய் புகார் அளித்தவர் மீது 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamilanban - Shivamogga,இந்தியா
11-அக்-201900:18:45 IST Report Abuse
Thamilanban இந்தப்பதறுகள் உண்மையிலேயே தேசத்துரோகிகள்தான்...
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
10-அக்-201917:10:45 IST Report Abuse
konanki ஐய்யா ஜாலி இனிமேல் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவம் மேல் கல் எறியலாம். ராமலிங்கம் போன்றவர்களை வெட்டி சாய்க்க லாம். லவ் ஜிஹாத் ல் ஈடுபடலாம். இந்த "நல்ல காரியங்கள்" செய்பவர்கள் மீது தப்பி தவறி போலிஸ் நடவடிக்கை எடுத்தால் 49 பேரும் பிரதமருக்கு கடிதம் எழுதி விளம்பரங்கள் தேடி கொள்ளலாம்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
10-அக்-201917:02:26 IST Report Abuse
konanki பச்சையப்பன் இந்த 49 பேரும் இந்தியா வின் வளர்ச்சிக்கு ஆதரவாக இல்லாதவர் களா? பெரும்பான்மை மக்களுக்கு எதிரியா? சிறுபான்மை யின் சக்தியினால் வழக்கம் போல பெரும்பான்மையினர் தோல்வி அடைந்தார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X