பொது செய்தி

இந்தியா

இலவச, 'அவுட் கோயிங்'கை நிறுத்தியது 'ஜியோ'

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (57)
Share
Advertisement

புதுடில்லி: 'ஜியோ' தொலை தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், இனி, மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை அழைக்க, நிமிடத்துக்கு, 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.latest tamil newsரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின், ஜியோ தொலை தொடர்பு சேவை நிறுவனம், அதிரடியான சலுகை அறிவிப்புகளுடன், ஏராளமான வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ஜியோ இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள், ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களின் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களை இலவசமாக அழைக்கலாம். இதற்கு, இதுவரை கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்றுடன் இந்த இலவச சேவையை, ஜியோ நிறுவனம் நிறுத்தியுள்ளது. இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜியோ வாடிக்கையாளர்கள், இனிமேல், மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை அழைக்க, நிமிடத்துக்கு, 6 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, அதற்கு சமமான இணைய சேவையை, அவர்கள் பெறலாம். அதேநேரத்தில், ஜியோ வாடிக்கையாளர்கள், சக ஜியோ வாடிக்கையாளர்களை, வழக்கம்போல் இலவசமாக அழைக்கலாம். 'லேண்ட்லைன்' இணைப்புகளுக்கும் கட்டணம் கிடையாது.


latest tamil news'இன் கமிங், மிஸ்டு கால், அவுட் கோயிங்' போன்றவற்றுக்கு, ஏர்டெல் உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கு, ஜியோ, கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், ஜியோ நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில், 'டிராய்' எனப்படும் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், விதிமுறைகளை மாற்றும் வரை, இந்த நடவடிக்கை தொடரும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthik -  ( Posted via: Dinamalar Android App )
10-அக்-201915:40:27 IST Report Abuse
karthik பல லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் கடன் வாங்கி ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து லாபம் சம்பாதிக்காமல் எப்படி இருக்க முடியும்..... இலவசம் என்று சொன்னவுடன் ஆட்டு மந்தை கூட்டம் போல சென்று ஆதார் அட்டையை காண்பித்து சிம் கார்டு வாங்கி அவரை வாயார வாழ்த்திவிட்டு இப்பொழுது ஒரு நிமிடத்திற்கு 6 பைசா என்று சொன்னவுடன் பொங்கும் .... திருந்தவே மாட்டார்கள் இந்த டாஸ்மாக்
Rate this:
Karunan - udumalpet,இந்தியா
11-அக்-201906:46:43 IST Report Abuse
Karunanஅது தெரியுது முதலில் நீ ஏன் எல்லாம் ஓசி ஓஸின்னு சொன்னே?நீயே கடன்காரன் ஓசி எதுக்கு கொடுக்கரே...ஏமாத்த தானே...
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
10-அக்-201912:22:41 IST Report Abuse
pradeesh parthasarathy உன் ஆட்டத்தை மெல்ல துவங்கு ராசா ...எவனும் கேள்வி கேட்க மாட்டான் ....
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
10-அக்-201915:40:05 IST Report Abuse
HSRசெரி செரி 2ஜி ல அடிச்சத வெச்சி ஜாலி பண்ண சொல்லேன் உங்க ஆளுங்களையும்...
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) ஏப்பா ஜியோ வருவத்திருக்க முன்னாடி வரைக்கும் வுட்கோயிங் பிரீயாவா இருந்தது ??? கண்டமேக்கி அதிகமா டாட்டா சார்ஜ் இருந்ததெல்லாம் ஏதோ இவர் புண்ணியத்தில் குறைந்தது??? இப்பகூட 6 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, அதற்கு சமமான இணைய சேவையை, அவர்கள் பெறலாம் என்று தானே கூறுகிறார்கள்??? அப்பறம் என்னையா பிரச்சனை ??? எல்லாம் ஓசியில் எதிர்பார்ப்பது தவறு ???
Rate this:
Karunan - udumalpet,இந்தியா
11-அக்-201906:36:16 IST Report Abuse
Karunan" எல்லாம் ஓசியில் எதிர்பார்ப்பது தவறு ??? "எல்லாம் ஓசி ஓசி என்று சொல்லி ஏமாற்றுவதும் தவறு "...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X