சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி விவசாயி, 2 மாடுகள் பலி

Added : அக் 09, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மின்சாரம் தாக்கி விவசாயி, 2 மாடுகள் பலி

திருநெல்வேலி : கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார் மேலும் 2 மாடுகள் இறந்தன.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் மேட்டுதெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை 44.. விவசாய கூலித் தொழிலாளி. இன்று(அக்.,9) இரவு 7 மணியளவில், இவர் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்திற்கு சென்றார். அங்கு இவருக்கு சொந்தமான 2 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தன. அதைப் பார்த்து அதிர்ச்சியுற்ற சின்னத்துரை அவற்றை மீட்க முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து அங்கேயே பலியானார். நாலாட்டின்புத்துார் போலீசார் விசாரித்தனர்.

பசுக்கள் பலி:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெருமாள்நகரைச் சேர்ந்தவர் மாசானம் ஆறுமுகம் 55 விவசாயி. கோக்கனேரி காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இன்று மாலை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது அப்போது மின்னல் தாக்கியதில் இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
10-அக்-201920:24:24 IST Report Abuse
Rajesh வயித்தெரிச்சல் பிடித்த சொந்தக்காரனின் செய்வினையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X