சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்துகளில் 3 பேர் பலி

Added : அக் 09, 2019
Advertisement

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே நடந்த இரு விபத்துக்களில், மூவர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை, அன்னவாசல் அருகே வயலோகத்தைச் சேர்ந்தவர், பூங்கோதை, 45. இவரது மகள், திவ்யபாரதி, 26 மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த, ஹரிஷ் ஆதித்யா, 10, ஆகிய மூவரும், இருசக்கர வாகனத்தில், புதுக்கோட்டையில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு திரும்பி கொண்டிந்தனர். அப்போது, பெருமநாடு அருகே, எதிரே வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், திவ்யபாரதி மற்றும் ஹரிஷ் ஆதித்யா ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

* புதுக்கோட்டை அருகே, வெள்ளனுர் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது, எதிரே வந்த கார் மோதிய விபத்தில், சத்தியமங்கலம் மேலுாரைச் சேர்ந்த, கோவிந்தராஜ், 40, என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X