பொது செய்தி

தமிழ்நாடு

2 மாதத்துக்கு பின் அவலாஞ்சியில் மின் உற்பத்தி

Added : அக் 09, 2019
Advertisement

ஊட்டி : மழை வெள்ளம் புகுந்த, அவலாஞ்சி மின் நிலையத்தில், இரண்டு மாதங்களுக்கு பின், மின் உற்பத்தி துவக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சியில், ஆக., 5 முதல், 12 வரை , 287 செ.மீ., அளவிற்கு கன மழை பதிவானது. பெருக்கெடுத்த மழை வெள்ளத்தால், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அவலாஞ்சி மின் நிலையத்தில், தண்ணீர் புகுந்தது; மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பராமரிப்பு பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம் மின் உற்பத்தி துவக்கப்பட்டது.

குந்தா மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் ரவி கூறுகையில், ''அவலாஞ்சி மின் நிலையத்தில், இரண்டு பிரிவுகளில், தினசரி, 40 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆக., 8 முதல், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணி நடந்தது. இரண்டு மாதங்களுக்கு பின், நேற்று முன்தினம் முதல், வழக்கம் போல் உற்பத்தி துவக்கப்பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X