அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலூரில் 167 பேருக்கு 'டெங்கு'

Added : அக் 09, 2019
Advertisement
வேலூரில்   167 பேருக்கு 'டெங்கு'




அரக்கோணம் : ''வேலுார் மாவட்டத்தில், 167 பேர், 'டெங்கு' காய்ச்சலில் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,'' என,
தமிழக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சோமசுந்தரம் கூறினார்.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் நகராட்சியில் உள்ள, 36 வார்டுகளில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை சார்பில், 'டெங்கு'
காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள், 10 நாட்கள் நடக்கிறது.இதன் துவக்க விழா, நேற்று நடந்தது. தமிழக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர்
சோமசுந்தரம் கூறியதாவது: நகராட்சி, கிராம பஞ்சாயத்து, பேருராட்சியில், வாரம் ஒருநாள், டெங்கு ஒழிப்பு பணிகள் நடக்கிறது.

வேலுார் மாவட்டத்தில், இரண்டு மாதங்களில், 240 பேருக்கு, டெங்கு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டன. தற்போது,
அரசு மருத்துவமனைகளில், டெங்கு பாதிப்பால், 167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X