அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு மக்களுக்கு முதல்வர் கோரிக்கை

Added : அக் 09, 2019
Advertisement
 சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு  மக்களுக்கு முதல்வர் கோரிக்கை

சென்னை : 'பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, தமிழக மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு, உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:இந்தியா - சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த, சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர், மாமல்லபுரத்தில் பேச்சு நடத்துவது, தமிழகத்திற்கு பெருமை. இது, தமிழகத்தின் மதிப்பை, உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, மாமல்லபுரத்தை தேர்வு செய்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழக மக்கள் மற்றும் அரசின் சார்பாக, இரண்டு உலக தலைவர்களையும் வரவேற்கிறேன்.

பல நுாற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சீனாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே, தொடர்பு உள்ளது.சீன நாட்டுடன் கடல் வழி வியாபாரம், மாமல்லபுரம் வழியாக நடந்ததாக, வரலாறு கூறுகிறது. எனவே, பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய மாமல்லபுரம், இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது, மிகவும் பொருத்தமானது.

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு, மாமல்லபுரத்தில் நடப்பது, பண்டைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. சீன அதிபரின் வருகை, தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். இரண்டு தலைவர்களுக்கும், தமிழக மக்கள் அனைவரும், உள்ளார்ந்த உணர்வோடு, உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X