பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 11,12-ல்போக்குவரத்து மாற்றம்

Updated : அக் 10, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

சென்னை: பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் சென்னை வருகையை முன்னிட்டு, 11.10.2019 மற்றும் 12.10.2019 ஆகிய தேதிகளில், சென்னையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.latest tamil newsசென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறிக்கை: 11.10.2019 மற்றும் 12.10.2019 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் சாலை வழி பயணத்தின் போது, ஜி.எஸ்.டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணா சாலை (கத்திபாரா முதல் சின்ன மலை வரை), சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து போக்குவரத்து தாமதமாக செல்ல வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் முன்னேற்பாடு செய்து தங்கள் பயணத்திட்டங்களையும், வழித்தடங்களையும் அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் 11.10.2019 அன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மற்றும் 12.10.2019 அன்று காலை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மேற்படி சாலைகளில் அனுமதிக்கப்படமாட்டாது. மேலும் மேற்படி மிக முக்கிய பிரமுரின் சாலை வழி பயணத்தின் போது கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைபடுத்தப்படும்.

* 11.10.2019 அன்று, 12.30 மணி முதல் 14.00 மணி வரை, பெருங்களத்தூரிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜி, எஸ்.டி சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் "0" பாயின்ட் சந்திப்பிலிருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும். 'மேலும் சென்னை தென்பகுதியிலிருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் ரோடு வழியாக , குரோம்பேட்டை - தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையை பயன்படுத்தி செல்லலாம்.


latest tamil newsமேலும் தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம்

* 11.10.2019 அன்று, 15.30 மணி முதல் 16.30 மணி வரை ஜி, எஸ்.டி சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் கத்திப்பாரா சந்திப்பிலிருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல், 100 அடி சாலை வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.

* 11.10.2019 அன்று, 14.00 மணி முதல் 21.00 மணி வரை, ராஜீவ் காந்தி சாலையில் (OMR) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

* 12.10.2019 அன்று, 07.30 மணி முதல் 14.00 மணி வரை, ராஜீவ் காந்தி சாலையில் (OMR) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். மேலும் 12.10.2019 அன்று, 07.00 மணி முதல் 13.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. தேசிய விருந்தினராக சென்னைக்கு வருகை புரியும் மிக முக்கிய பிரமுகரின் இந்தியப்பயணம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் அமைந்திட பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-அக்-201917:25:46 IST Report Abuse
பச்சையப்பன் இவங்க ரெண்டு பேரும் இங்கே வந்துதான் சந்திக்க வேண்டுமா?? இதனால் எத்த லட்சம் பேருக்கு பிரச்சினை? இதெல்லாம் தெரியாமல் என்ன தலைவன்? நாடு இருக்கும் நிலையில் மக்கள் பிச்சை எடுக்கும் நிலையில் அப்படி என்னதான் பேச்சு வார்த்தை?. ஒரு வேளை திருவோடு தயாரிக்க technology சீனாவிடம் கேட்பார்களோ?. மரத்தமிழன் தனக்கு ஓட்டு போடவில்லை என்ற காரணத்தால் இப்படி போக்குவரத்து சிக்கல் ஏற்படுத்தி பழி வாங்குகிறார்கள்.
Rate this:
Cancel
10-அக்-201916:13:48 IST Report Abuse
ஆப்பு புதுசா எட்டுவழிச்சாலை போடுவதை நிறுத்திட்டு இருக்குற ரோடுகளை விரிவாக்கம் செஞ்சிருந்தா விளங்கிடுவோமே...
Rate this:
Cancel
Subramanian R - CHENNAI,இந்தியா
10-அக்-201912:05:07 IST Report Abuse
Subramanian R In general, Chennai City Traffic comes with incomplete messages. This messages s unanswered questions such as: a) how the persons working in Taramani areas coming from different parts of Chennai to use OMR Road and their return to home is unclear. b) From what time and date with duration, traffic on OMR from Mathya Kailash is closed for all traffic. c) Most of the Entry and Exit Roads to / from OMR roads are not in a position to utilize fully due to uncleared status of those Roads, which s chaos on OMR as well. May be officials are aware and reluctant to take care of those roads, other than VVIP movements. But the fact is cascade effect is always serious and don't understand why ignored.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X