சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்பெண்ணையில் வெள்ளம் சென்னியம்மன் கோவில் செல்ல தடை

Added : அக் 09, 2019
Advertisement
 தென்பெண்ணையில் வெள்ளம்  சென்னியம்மன் கோவில் செல்ல தடை

ஓசூர் : தென்பெண்ணை ஆற்றில், வினாடிக்கு, 1,120 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால், சென்னியம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, இரண்டு நாட்களாக, வினாடிக்கு, 1,368 கன அடி நீர்வரத்து இருந்தது.தற்போது, மழை குறைந்த நிலையில், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 1,120 கன அடியாக சரிந்தது. இந்த தண்ணீர் முழுவதும், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.82 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

கடந்த, 5ம் தேதி முதல், 1,000 கன அடிக்கு மேல், தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் செல்வதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கரையோர பகுதி மக்கள், ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என, வருவாய்த் துறை மற்றும் போலீசார் சார்பில் ஆங்காங்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறையில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் நடுவில், சென்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு, குலதெய்வ வழிபாட்டிற்கு ஏராளமானோர் வருகின்றனர். சுவாமி வழிபாட்டுக்கு முன், தென்பெண்ணை ஆற்றில் நீராடுவர்.

இரண்டு ஆண்டுகளாக, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. தற்போது, கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைகளுக்கு அதிக நீர்வரத்தால், தண்ணீர் திறந்து விடப்பட்டு, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி, ஆற்றில் இறங்கி சென்னியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல, அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் தடை விதித்துள்ளனர்.

பக்தர்கள் கரையிலிருந்து சுவாமி தரிசனம் செய்யுமாறு, விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. குமரியில் நிரம்பும் அணைகள் குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மலையோர கிராமங்களில், தொடர்ந்து சாரல் மழை நீடிக்கிறது. 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம், நேற்று மாலை 69.10 அடியாக இருந்தது. 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறையில், 28.50 அடிக்கு தண்ணீர் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X