சசிகலா விதி மீறியது உண்மைதான்!

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (46)
Advertisement

பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை தான் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, சிறையில் திடீர் சோதனை நடத்தினார். சோதனையில், சிறை விதிமுறைகளை மீறி தனி சமையல், சிறையிலிருந்து வெளியே சென்றது உள்ளிட்டவற்றை கண்டுபிடித்தார். விஷேச சலுகைகளுக்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ், சசி தரப்பிலிருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து இப்புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக் குழுவை கர்நாடக அரசு அமைத்தது. கடந்த ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சசிகலா சிறை விதிமுறைகளை மீறியது உண்மை தான் என தெரிய வந்துள்ளது. மேலும் டி.ஐ.ஜி., ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைதான் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, 2020 பிப்., மாதம் தனது மூன்றாண்டு சிறை தண்டனையை நிறைவு செய்கிறார். இதனையடுத்து நன்னடத்தை அடிப்படையில் சிறையிலிருந்து விடுதலையாக , சசி திட்டங்கள் வகித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் தற்போது கசிந்து, சசியின் விடுதலை கனவை கலைய வைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
10-அக்-201921:08:52 IST Report Abuse
Sampath Kumar அட டா என்ன இப்போ?? அம்புட்டு அரசியில் வியதிகள் எல்லாம் உத்தம புத்திரனா?? நீங்க உயர்த்தி பிடிக்கும் மோடி எல்லாத்தகும் 15 லச்சம் தரேன் என்று சொன்னாரே ? தந்தாரா இது விதி மீறல் இல்லையா உங்களுக்கு வந்த ரத்தம் மந்தவனுக்கு வந்த தக்காளி போங்கடா உங்க நியாமும் அரிசியிலும்
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
11-அக்-201905:00:18 IST Report Abuse
meenakshisundaramசசி விஷயத்துக்கும் மோடிக்கும் முடிச்சுப்போடும் 'அறிவை '(?) என்னென்று சொல்வதப்பா ?கேனயன்கள் இருக்கும் வரை சசி போன்றொர் enjoy செய்யவே செய்வார்கள்....
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
11-அக்-201910:28:35 IST Report Abuse
madhavan rajanவருடம் 72000 தருவேன் என்று கூறியதற்கே கொள்ளைக்காரர்களாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஓட்டுக்களை போட்ட இந்த சம்பத் குமார் போன்றவர்கள் பதினைந்து லட்சம் தரேன் என்று சொன்னால் எதற்கு அவருக்கு ஒட்டுப் போடவில்லை என்று கூறமுடியுமா? ஒட்டு யாருக்கோ போடுவோம் ஆனால் பணம் மட்டும் எங்களுக்கு கொடுத்து விடவேண்டும் என்பதுதான் தமிழக வாக்காளர்கள் நியாயமோ?அவர் கூறியதை சரியாக புரிந்து கொள்ளாததால் வந்தது இவர்களுக்கு இந்த குழப்பம். அவர் கூறியது வெளிநாட்டில் பலர் குவித்திருக்கும் கருப்புப்பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்தால் ஒவ்வொருவருக்கும் பதினைந்து லட்சம் அளிக்க முடியும் என்று கூறினார். கறுப்புப் பணத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளும் நடந்து வருகிறது. அவர் என்ன சுடலை மற்றும் ராகுலைப் போல அரசு கஜானாவிலிருந்து அனைவருக்கும் பணம் தரப்படும் என்றா கூறினார். அப்படி கூறியிருந்தால் அந்த செய்தியை ஆதாரமாக காட்டவும். அப்படி ஆதாரத்தோடு இவர்களிடம் அவரின் உறுதிமொழி இருந்தால் எதற்காக அதை ஏற்று இவர்கள் அந்த கட்சிக்கு ஓட்டுப்போடவில்லை என்பதையும் தெரிவிக்க வேண்டும். இப்போது எதற்கு 72000 த்தை நம்பி ஓட்டுப்போட்டார்கள் என்பதையும் தெரிவிக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai ,இந்தியா
10-அக்-201915:36:13 IST Report Abuse
Raj லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு பதவி உயர்வு எப்பொழுது?
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
10-அக்-201913:12:11 IST Report Abuse
Visu Iyer அப்போ பணம் வாங்கிய அதிகாரிகளை மன்னித்து விடுவார்களா..? பேனர் விழுந்தால் பொன்னையன் ஐயா சொல்வது காற்றின் மீது வழக்கு போடுவதற்கு பதில் பேனர் கம்பெனி மீது வழக்கு போடுவது போல பணத்தின் மீது வழக்கு போட முடியுமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X