காஷ்மீரில் கவுன்சில் தேர்தல் புறக்கணிக்கிறது காங்.,

Added : அக் 09, 2019 | கருத்துகள் (1)
Advertisement

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், பி.டி.சி., எனப்படும், வட்டார வளர்ச்சி கவுன்சிலுக்கு நடக்க உள்ள தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, காங்., அறிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, ஆகஸ்ட், 5ம் தேதி, மத்திய அரசு ரத்து செய்தது. அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க, மாநிலம் முழுவதும், தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டது.முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உட்பட, பல்வேறு கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.நிலைமை சீரானதையடுத்து, ஜம்முவில் மட்டும், கட்டுப்பாடுகள் முற்றிலுமாக தளர்த்தப்பட்டுள்ளன.

அமைதி நிலவ தொடங்கியுள்ளதால், காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை, படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கையை, ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், வட்டார வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல், வரும், 24ல் நடக்கிறது. வட்டார அளவில், உள்ளாட்சி நிர்வாகத்தை நடத்துவதில், இந்த கவுன்சில் முக்கிய பங்காற்றுகிறது.இந்த தேர்தலில், பா.ஜ., போட்டியிடுகிறது. வேறு சில கட்சிகளும், வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

ஆனால், இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது குறித்து, மாநில காங்கிரஸ் தலைவர் மிர் கூறுகையில், ''தற்போதைய சூழலில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறும் தேர்தலில் பங்கேற்பது, சரியானமுடிவாக இருக்காது. ''எங்கள் கட்சித் தலைவர்கள் பலரும், சிறையில் உள்ளனர். தொண்டர்கள் மீது, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், தேர்தலில் பங்கேற்க முடியாது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
10-அக்-201912:33:04 IST Report Abuse
s.rajagopalan நல்ல நொண்டி சாக்கு உதை வாங்குவதிலிருந்து தப்பிக்க .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X