பொது செய்தி

இந்தியா

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மாமல்லபுரம் வருகை உறுதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Updated : அக் 11, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய பயண திட்டம், சீன வெளியுறவு அமைச்சகத்தால், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசும், இதை உறுதி செய்துள்ளது. இதையடுத்து, சீன அதிபரின் மாமல்லபுரம் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.அண்டை நாடான, சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங், நாளை இந்தியா வரவுள்ளதாகவும், சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில், பிரதமர் மோடியை, அவர்
சீன அதிபரின், மாமல்லபுரம், வருகை ,உறுதி, சந்திப்பு,மோடி

புதுடில்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய பயண திட்டம், சீன வெளியுறவு அமைச்சகத்தால், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசும், இதை உறுதி செய்துள்ளது. இதையடுத்து, சீன அதிபரின் மாமல்லபுரம் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடான, சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங், நாளை இந்தியா வரவுள்ளதாகவும், சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில், பிரதமர் மோடியை, அவர் சந்தித்து பேசவுள்ளதாகவும், ஒரு மாதத்துக்கு முன்பே, தகவல்கள் வெளியாகின. அதற்கான ஏற்பாடுகளும், சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் தீவிரமாக நடந்து வந்தன. மாமல்லபுரத்துக்கு, 20 நாட்களுக்கு முன்பே, சீன அதிகாரிகள் வந்து, ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

சீன பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னை, மாமல்லபுரத்தில், பல கோடி ரூபாய் செலவில், கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டன. சென்னை விமான நிலையம், சீன அதிபர் தங்கவுள்ள, சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களிலும், இந்த வழித்தடங்களிலும், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்க, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, திபெத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாமல்லபுரத்துக்கு, சுற்றுலா பயணியர் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சீன அதிபரின் வருகையை, அந்த நாட்டு அதிகாரிகள், நேற்று காலை வரை உறுதி செய்யவில்லை. மத்திய அரசும், இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


பதற்றம்:

இதனால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், சீன அதிபரின் வருகை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாத வரை, அதை உறுதி செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது. இதனால், மத்திய அரசு அதிகாரிகளிடம், ஒருவித பதற்றம் நிலவியது. இந்நிலையில், சீன அதிபர், இந்தியா வருவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன்னதாக, நேற்று மதியம், அவரது வருகையை, இரு நாட்டு வெளியுறவு அமைச்சகங்களும், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

இது குறித்து, நம் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: சீன அதிபரின் வருகையை உறுதி செய்து, அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் தகவல் அனுப்பியுள்ளது. சீன அதிபர், பிரதமர் மோடியுடன், வரும், 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், மாமல்லபுரத்தில் பேச்சு நடத்துகிறார். இது ஒரு, கலந்துரையாடல் நிகழ்வாக இருக்கும். இரு தரப்பு உறவு, சர்வதேச பிரச்னைகள், ஆசிய பிராந்தியத்தில் உள்ள பிரச்னைகள் ஆகியவை குறித்து, இரு தலைவர்களும் பேச்சு நடத்த உள்ளனர். காஷ்மீர் விவகாரம், நம் நாட்டின் உள்நாட்டு பிரச்னை என்பதால், அது குறித்து, இந்த சந்திப்பில் பேச்சு நடக்க வாய்ப்பில்லை.


விளக்கம்:

அதேநேரத்தில், காஷ்மீர் விவகாரம் குறித்து, சீன அதிபர் தரப்பில், ஏதாவது கேள்வி எழுப்பினால், அதற்கு, பிரதமர் மோடி, உரிய விளக்கம் அளிப்பார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தற்போது சீனாவில் உள்ளார். அந்த சந்திப்புக்கும், சீன அதிபரின் இந்திய வருகைக்கும் எந்த தொடர்பும் இருக்காது. பயங்கரவாதத்தை ஒழிப்பது, ஆசிய பிராந்தியத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்துவது, இரு நாட்டு எல்லையில், அவ்வப்போது ஏற்படும் சலசலப்புகளுக்கு தீர்வு காண்பது, வர்த்தக பிரச்னைகள் ஆகியவை குறித்தும், பிரதமர் மோடியும், சீன அதிபரும் பேச உள்ளனர்.

கடந்தாண்டு, சீனாவின் வுகான் நகரில், இரு நாட்டு தலைவர்களும், முக்கிய பிரச்னைகள் குறித்து பேசியுள்ள நிலையில், தற்போது, மாமல்லபுரத்தில் நடக்கும் சந்திப்பு, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


காஷ்மீர் பிரச்னை; ஜி ஜின்பிங் கருத்து:

சீனாவுக்கு வந்துள்ள பாக்., பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, நேற்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின், ஜி ஜின்பிங் வெளியிட்டுள்ள அறிக்கை: பாக்., பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சு நடத்தினேன். காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகளை கவனித்து வருகிறேன். இந்தப் பிரச்னைக்கு, இரு நாடுகளும் இணைந்து, அமைதியான முறையில் பேச்சு நடத்தி, தீர்வு காண வேண்டும் என்பதே, சீனாவின் விருப்பம். இந்த விவகாரத்தில், முக்கிய பிரச்னைகள் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


எல்லை பிரச்னைக்கு தீர்வு காண விரைவில் பேச்சு:

சீன அதிபர் வருகை குறித்து, அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சூனியிங் கூறியதாவது: வரும், 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறார். சென்னை அருகே மாமல்லபுரத்தில், சீன அதிபர், இந்திய பிரதமர் மோடியை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்துகிறார். இரு நாட்டு எல்லை பிரச்னையை தீர்ப்பது குறித்து, இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தவுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-அக்-201900:52:13 IST Report Abuse
Pugazh V என்னாது? இப்ப தான் அஃபிஷியலா கன்ஃபர்ம் பண்ணாங்களா? உறுதிப்படுத்தப்படாத வருகைக்கே இப்படி அலப்பறை பண்ணும் அளவுக்கு அடிமையாகிக் கிடக்கும் மத்திய மாநில அரசுகள் கேலிக்குரியவை.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-அக்-201919:11:43 IST Report Abuse
Pugazh V சீனாவை கம்மிகள் அதுஇது என்று திட்டி எழுதி வந்த பாஜக வாசகர்கள் முகத்தில் கரி பூசப்பட்டு விட்டது. செம்ம செம்ம. சீன அதிபருக்கு கரகாட்டம், காவடிகள் எல்லாம் ரெடி பண்ணியாச்சு
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
10-அக்-201915:59:00 IST Report Abuse
Poongavoor Raghupathy One benefit due to this Mahabhalipuram meet is certain that this place has become more cleaner and good roads are laid in and around this Historical Place. But what theis meeting is going to give the prosperity of the Nations we will have to wait and see. But the good point is we honor our other Nation Leaders for mutual friendship and cooperation.Indian Hospitality is shown to others and over all the money spent on this Chinese Leader visit is not a waste. The Country China who had grabbed some areas of our Nation and who is a friend of our enemy Pakistan is shown our hospitality attitude and must be welcomed by one and all. Will China be prepared to venture into ing big Industries in India for more Indian employment is a big question.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X