பஞ்சாபில் பறக்கும் பாக்., குட்டி விமானம்

Added : அக் 09, 2019
Advertisement

சண்டிகர் : இந்தியா - பாக்., எல்லை யில் அமைந்துள்ள, பஞ்சாப் மாநில கிராமங்களில், பாக்.,குக்கு சொந்தமான, 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா குட்டி விமானம், நேற்று முன் தினம் பறந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா - பாக்., எல்லை யில் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தில், பாக்.,குக்கு சொந்தமான, 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா குட்டி விமானம் மூலம், இந்தியாவுக்குள் ஆயுதங்கள் கடத்தி வரப்படுவது, கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், பஞ்சாபின் டார்ன் டாரன் மாவட்டத்தில் உள்ள, ஜபல் என்ற இடத்தில், பாக்.,குக்கு சொந்தமான ட்ரோன் ஒன்று, எரிந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது.இவை இரண்டும், பாக்., ஆதரவு பெற்ற பயங்கர வாத அமைப்புகளுக்கு சொந்த மானது என்பது, விசாரணை யில் தெரிய வந்தது.

இந்நிலையில், பஞ்சாபின் ஹுசைனிவாலா பகுதியில், கடந்த திங்களன்று, ஆளில்லா குட்டி விமானம் பறப்பதை அப்பகுதி மக்கள் கண்டு, புகார் அளித்தனர்.இந்த சம்பவம் நடந்த மறுதினமே, அதே பகுதியில் உள்ள, ஹஸாராசிங் வாலா மற்றும் மென்டிவாலா என்ற கிராமங்களில், நேற்று முன்தினம் இரவு, பாக்.,குக்கு சொந்த மான ஆளில்லா குட்டி விமானம் பறந்துள்ளது.இதை, அப்பகுதி மக்கள், தங்கள், 'மொபைல் போன்'களில் படம் பிடித்து, அதிகாரிகளிடம் காண்பித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X